ஏப்ரல் 17-19 அஷ்டமி, நவமி-மனு தாக்கல் செய்ய வேட்பாள்கள் தயக்கம்
சென்னை: தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் தொடங்கும் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் அஷ்டமியும், 19ம் தேதி நவமியும் வருவதால், அந்த மூன்று நாட்களும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வதைத் தவிர்ப்பார்கள் எனத் தெரிகிறது.
நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து, நேரம் பார்த்து எதையும் செய்யும் பழக்கம் தமிழக மக்களிடம் நிறையவே உண்டு. குறிப்பாக அரசியல் கட்சியினர், திரையுலகினர் மத்தியில் இதற்கெல்லாம் ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
இந்த நிலையில் தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான மனு தாக்கல் 17ம் தேதி தொடங்குகிறது. ஆனால் அன்றைய தினமும், அடுத்த நாளும், அஷ்டமி வருகிறது. 19ம் தேதி நவமி வருகிறது.
இதனால் இந்த மூன்று நாட்களும் சாஸ்திர, சம்பிரதாயம் பார்க்கும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வது நடைபெறாது என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் இந்த மூன்று நாட்களும் கண்டிப்பாக மனுத்தாக்கல் செய்ய மாட்டார்கள் என நம்பப்படுகிறது.
தமிழகத்தில் 17ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications