இந்தியாவில் 5 இடங்களில் குண்டுவெடிக்கும் - பாக்.கிலிருந்து மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

மும்பை: லோக்சபா தேர்தல் சமயத்தில் இந்தியாவில் ஐந்து இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என பாகிஸ்தானிலிருந்து மும்பை போலீஸாருக்கு இ மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த தனியார் டிவி நிறுவனத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஒரு இ-மெயில் வந்தது. மக்களவை தேர்தல் நேரத்தில் 5 இடங்களில் குண்டு வெடிக்கும் என அதில் எச்சரிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து மும்பை காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவினர் விசாரணை செய்தனர். இந்த இமெயில், பாகிஸ்தானின் லாகூரில் உள்ள கம்ப்யூட்டரிலிருந்து அனுப்பப்பட்டு இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

இதே முகவரியிலிருந்து கடந்த மார்ச் 30, 31 தேதிகளில் தெற்கு மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு மிரட்டல் இ-மெயில் அனுப்பப்பட்டது. ஆனால், குண்டு எதுவும் வெடிக்கவில்லை.

பின்னர் ஏப்ரல் 5ம் தேதி மும்பை சர்வதேச விமான தளத்தை தகர்க்க போவதாக இதே நபர் வேறொரு முகவரியிலிருந்து மிரட்டல் இ-மெயில் அனுப்பியிருந்தார்.

எனவே தற்போது வந்துள்ள மெயிலும் போலியானதாக இருக்கலாம், பீதியைக் கிளப்பும் நோக்கில் அனுப்பப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மும்பையின் முக்கியப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+