இந்தியாவில் 2 பேருக்கு ஸ்வைன் ப்ளூ?-சென்னை வாலிபர் டிஸ்சார்ஜ்

அதே நேரத்தில் இந்த நோய் தாக்குதலுக்கு உள்ளதானதாக் கூறப்பட்ட அமெரிக்காவிலிருந்து திரும்பிய சென்னையைச் சேர்ந்த இளைஞர் உட்பட 5 பேருக்கு ஸ்வைன் ப்ளூ இல்லை என உறுதிசெய்யப்பட்டு, அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
மெக்சிகோ உள்ளிட்ட 15 நாடுகளில் ஸ்வைன் ப்ளூ எனப்படும் பன்றி காய்ச்சல் நோய் அதிவேகமாக பரவி வருகிறது. இதையடுத்து இந்திய அரசு, இந்தியா வரும் அனைத்து விமானங்களையும் சோதனை செய்து வருகிறது.
அதில் அமெரிக்காவில் இருந்து ஹைதராபாத் வந்த சென்னையைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப என்ஜினியர் ஒருவருக்கு ஸ்வைன் ப்ளூ அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர் ஹைதராபாத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.
இவரை தவிர டெக்சாஸ் மாநிலத்தில் இருந்து டெல்லி வந்த இருவருக்கும், பின்னர் லண்டனில் இருந்த வந்த ஒருவருக்கும் ஸ்வைன் ப்ளூ நோய் தாக்கியதற்கான அறிகுறிகள் இருந்தன. அவர்கள் டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்தம் 7 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் ராம் மனோகர் லோகர் மருத்துவமனையின் ஆய்வாளர் என்.கே.சதுர்வேதி கூறுகையில்,
ஹைதராபாத் மற்றும் டெல்லியில் இருந்த வந்த 5 சாம்பிள்களில் ஸ்வைன் நோய் தாக்கம் எதுவும் இல்லை. மற்ற இருவரை மட்டும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவர்களின் சாம்பிள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்கு பின் முடிவு தெரியும் என்றார்.
இந்நிலையில் அரசு கடந்த சில வாரங்களுக்குள் மெக்சிகோவில் இருந்து இந்தியா திரும்பிய 2000 பேரின் பட்டியலை தயார் செய்து வருகிறது. அவர்களுக்கு நோய்க்கு அறிகுறி இருக்கிறதா என்ற சோதனை நடக்கவுள்ளது.
இதற்கிடையே மத்திய நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் மெக்சிகோ, அமெரிக்காவில் இருந்து வரும் பயணிகள் தங்களுக்கு ஸ்வைன் ப்ளூ வைரஸ் தாக்குதல் உள்ளதா என்பதை சோதித்துக் கொள்ளுமாறும், அவ்வாறு இருப்பது தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு விரையுமாறும் கோரியுள்ளது.
மெக்சிகோவில் நோய் பரவல் குறைந்தது...
இதற்கிடையே இந்த நோய் ஆரம்பித்த மெக்சிகோவில் அதன் பரவல் கட்டுக்குள் வந்துவிட்டது. இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்து விட்டதாக அந் நாட்டு நலத்துறை அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் ஐரோப்பா, அமெரிக்காவில் நோய் பரவல் அதிகரித்து வருகிறது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications