எதிர்பார்த்த மாதிரி இல்லை நானோ புக்கிங்!

காரணம், குறைந்தது 5 லட்சம் கார்களுக்கு புக்கிங் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2.03 லட்சம் கார்களுக்கு மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் கனவுக் கார் என வர்ணிக்கப்பட்ட நானோ கார் சூப்பர் ஹிட்டாகும் என மீடியா வர்ணித்தது. டாடாவும் பெரிதும் நம்பிக்கையுடன் காத்திருந்தது.
ஆனால் நானோ முன்பதிவு துவங்கும்போதே, குறிப்பிட்ட சிலருக்கு மட்டும்தான் அதுவும் குலுக்கல் முறையில் கார் கிடைக்கும். மற்றவர்கள் காத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டதும் மக்கள் ஆர்வமிழக்கத் தொடங்கினர். இதனால் முதல் மூன்று தினங்களில் நாடுமுழுவதிலுமிருந்து வெறும் 40 ஆயிரம் விண்ணப்பங்களே வந்திருந்தன.
இப்போது முன்பதிவுகள் முடிந்துவிட்டன. மொத்தம் 2.03 லட்சம் முழுமையாக செலுத்தப்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதன் மூலம் ரூ.2500 கோடியைப் பெற்றுள்ளது டாடா நிறுவனம். ஆனால் டாடா எதிர்பார்த்தது குறைந்தது 5 லட்சம் முன்பதிவுகள். இதன் மூலம் குறைந்தது ரூ.7000 கோடி புரட்ட முடியும் என நம்பிக்கை தெரிவித்திருந்தது.
தற்போது குஜராத்தில் அமையவிருக்கும் தொழிற்சாலையில் ஆண்டுக்கு 2.5 லட்சம் நானோக்களை உற்பத்தி செய்ய முடியும். ஆனால் இப்போது கிடைத்துள்ள ஆர்டரோ வெறும் 2.03 லட்சம்... அதாவது உற்பத்தி அளவை விட 49700 முன்பதிவுகள் குறைந்துள்ளது.
இது டாடா மோட்டார்ஸை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
ஏன் இந்த மோசமான முன் பதிவு?
'டாடா மோட்டார்ஸ் நானோ முன் பதிவுக்கு வைத்த அளவுக்கதிகமான விலைதான் இதற்குக் காரணம். கிட்டத்தட்ட ரூ. 1 லட்சம் வரை நானோவுக்கு முன்பணமாகவே செலுத்த வேண்டியுள்ளது. அதற்குப்பிறகு 40 ஆயிரம் ரூபாயை மட்டும் தவணையில் செலுத்த வேண்டும். இதில் பெரிய கவர்ச்சி இல்லாமல் போய்விட்டது.
இந்தக் காரின் விலையே ரூ.1 லட்சம் என்றுதானே சொன்னார்கள். இப்போது ரூ.1 லட்சம் முன்பதிவுக்கு மட்டுமே என்றால் எப்படி? என பல ஷோரூம்களில் வாடிக்கையாளர்கள் சண்டை போடுகிறார்கள்.
இன்னொன்று எந்த வகுப்பினரை முன்னிறுத்தி நானோவைத் தயாரித்தார்களோ, அந்த வகுப்பினரின், ஆரம்ப முதல் செலுத்தும் திறன் பற்றியே டாட்டா மோட்டார்ஸ் சிந்திக்கவில்லை', என ஆட்டோமொபைல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நானோவின் மூன்று மாடல்களில் இப்போது அடிப்படை மாடல் இரண்டுக்கும் பெரிய வரவேற்பில்லை. விலை அதிகமுள்ள மூன்றாவது மாடல் காருக்குத்தான் 50 சதவிகித முன்பதிவு நடந்துள்ளது.
ஆக, ஏழைகளுக்கான காரை வாங்க ஏழைகள் முன்வரவில்லை, அல்லது அடிப்படை மாடல் அவர்களைக் கவரவில்லை என்பதே உண்மை என்கிறார்கள் நிபுணர்கள்.
முன்பதிவுக்கு மட்டும் 6.10 லட்சம் விண்ணப்பங்களை மக்கள் வாங்கியுள்ளனர். ஆனால் அவர்களில் மூன்ரில் ஒரு பங்குதான் உண்மையில் முன்பதிவு செய்துள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications