'மாமா.. மாமா.. நீங்க எந்த வாசல் பக்கமா போனீங்க?'

மத்திய அமைச்சராக இருந்தவரும் பாமக மூத்த தலைவருமான அன்புமணியின் ஒரு பிரச்சாரக் கூட்டத்தின் பேச்சை நேற்றிரவு ஜெயா டிவி ஒளிபரப்பியது. அதன் விவரம்:
ஸ்டாலின்னு ஒருத்தரு என்னை குறை சொல்றாரு. நாடாளுமன்றத்துக்கு நான் கொல்லைப் புற வாசல் வழியா (ராஜ்யசபா) நுழைஞ்சிட்டேன்னு சொல்றாரு. உன் தங்கச்சி (கனிமொழி) எந்த வாசல் வழியாப்பா நாடாளுமன்றத்துக்கு வந்துச்சு.. தெரு வாசல் வழியாவா?.
உங்க மாமா (முரசொலி மாறன்) 30 வருசமா எந்த வாசல் வழியாப்பா போனாரு.. தெரு வாசல் வழியாவா கொல்லைப் பக்கமாவா?. அப்ப நீ அவருகிட்ட கேட்டியா. மாமா.. மாமா.. நீங்க எந்த வாசல் பக்கமா போனீங்கன்னு கேட்டியா?.
இதே கேள்விய பிரதமர் கிட்ட கேக்க உனக்கு தைரியம் இருக்காப்பா..
துரைமுருகன்னு ஒருத்தரு இருக்காரு. அவரு திருவண்ணாமலையில பேசுறாரு.. நாம 39 இடத்துல ஜெயிக்காட்டியும் பரவாயில்ல, திருவண்ணாமலையிலே ஜெயிச்சே ஆகனும்னு பேசியிருக்காரு. காடு வெட்டி குருவ தோக்கடிச்சே ஆகனும். இல்லாட்டி நாம வேட்டியே கட்ட முடியாதுன்னும் சொல்லியிருக்காரு..
இப்பவே துரைமுருகன பாக்க சகிக்கல.. இதுல வேட்டி வேற இல்லாம.. நினைக்கவே முடியல.
அப்புறம் எ.வ.வேலுன்னு ஒரு அமைச்சர். அவரு தான் நம்ம உணவுத்துறை அமைச்சர். அவருக்கு வேலையே அரிசி கடத்துறது தான். அவரு சொல்றாரு.. திருவண்ணாமலையில நாம ஜெயிக்காட்டி நான் ஒரு அப்பனுக்கு பொறந்தவன் இல்ல.. இப்படி ஒரு பேச்சு.
தேர்தல் முடிவு வந்த பின்னால எத்தன பேரு எத்தன அப்பன தேடிப் போகப் போறாங்களோ தெரியாது.
இவ்வாறு பேசினார் அன்புமணி.
ஊ... ஆ... எஸ்.எஸ்.சந்திரன்:
அதே போல அதிமுக தென் சென்னைத் தொகுதி வேட்பாளராகி 'உடல் நலம் சரியில்லாத காரணத்தால்' அந்த ஸ்தானத்தை இழந்த எஸ்.எஸ்.சந்திரன் பேசுகையில்,
சிவாஜி கணேசன் செத்ததுக்கே கருணாநிதி தான் காரணம். நாம தான் மிகப் பெரிய நடிகர்னு சிவாஜி நினைச்சிக்கிட்டு இருந்தாரு. ஆனால், அவரையே நடிப்புல மிஞ்சிக் காட்டினாரு கருணாநிதி. அதனால் தான் அவர் இனிமே உயிரோட இருக்குறதே வேஸ்ட்னு செத்துப் போயிட்டாரு.
மெரீனா பீச்சுல கருணாநிதி போட்டாரே ஒரு நடிப்பு. உண்ணாவிரத நடிப்பு.. என்ன நடிப்புப்பா...?. அவரு இப்போ ஆஸ்பத்திரியிலே அட்மிட் ஆகியிருக்குறது கூட நடிப்பு தான். அவரை நம்பாதீங்க. (முதல்வர் கருணாநிதியின் குரலில்) ''இது தான் என் கடைசி தேர்தல்.. எனக்கு ஓட்டு போடுங்க.. ஊ... ஆ...ன்னு'' சவுண்டு குடுபபாரு.. நீங்க ஏமாந்துறப்படாது.
இவ்வாறு பேசினார் எஸ்.எஸ்.சந்திரன்.
-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியானது.. சின்னதுரைக்கு மீண்டும் வாய்ப்பு! -
பெரும் பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்படுமா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் கேள்வி -
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
ரூ.2000 + ரூ.8000.. இல்லத்தரசிகளின் மனதை வெல்லும் திமுக மாஸ்டர் பிளான்.. கூப்பன் தருவது ஏன்? -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
75 வருட வரலாற்றில் முதன்முறை..DSV vs IPS! திண்டுக்கல்லில் நேருக்குநேர் மோதும் திமுக-அதிமுக மா.செ.கள் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications