ஆதாரமற்ற புகார்: ஜெ. மீது கிரிமினல் வழக்கு-தயாநிதி
சென்னை: தொடர்ந்து ஆதாரமற்ற புகார் அள்ளிவீசி வரும் அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா மீது கிரிமினல் வழக்கு தொடரப் போவதாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
மத்திய சென்னை தேர்தல் பிரசார கூட்டத்தில் ஒரு பொய்யை ஜெயலலிதா அவிழ்த்துவிட்டுள்ளார். நான் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது என் வீட்டுக்கு 323 தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டதாகவும், அந்த இணைப்புகளை நான் சன் டிவியுடன் இணைத்து அதன் பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தியதாகவும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
நான் மத்திய அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு, யாரோ அவசரத்தில் அனுப்பிய புகார் மீது அது உண்மையா என கண்டறிய அதனை சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் தொலைதொடர்பு துறைக்கு அனுப்பி விசாரிக்க கூறுகிறார். இதுதான் ஜெயலலிதா கொடுத்த ஆதாரத்தில் இருப்பது.
பின் தொலைதொடர்பு துறை அதனை விசாரித்து அந்த புகாரில் எள்ளளவும் ஆதாரமில்லை என அறிவித்துவிட்டது. ஜெயலலிதாவுக்கு அவசரம், முழுவதையும் அறிந்து கொள்ளாமல் முனை முறிந்த குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
மதுரையில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசியபோது, மதுரையில் 10ம் தேதி நடைபெற இருக்கும் சித்திரை திருவிழாவில் மாபெரும் குழப்பம் விளைவிக்க திமுகவினர் திட்டமிட்டு இருப்பதாகவும், அந்த திட்டத்தின் மூலம் மக்களிடையே பீதியை உண்டாக்கி 13ம் தேதி அவர்களை ஓட்டுப்போட விடாமல் தடுத்து கள்ள ஓட்டுப்போட எல்லா ஏற்பாடுகளும் நடந்துவிட்டதாக தனக்கு நம்பத்தகுந்த தகவல் வந்துள்ளதாக குற்றச்சாட்டை கூறினார்.
சித்திரை திருவிழா அமைதியாக எந்தவித சிறு தடங்களும் இன்றி நடந்தேறிவிட்டது. ஜெயலலிதாவின் சாயமும் வெளுத்துவிட்டது. அதுபோல திட்டமிட்டு, ஆதாரமற்ற புகாரை கூறிய ஜெயலலிதா மீது கிரிமினல் வழக்கு தொடர உள்ளேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications