வழுக்கி விழுந்து முன்னாள் அமைச்சர் சரஸ்வதி மரணம்
சென்னை: முன்னாள் தமிழக அமைச்சர் பி.டி.சரஸ்வதி நேற்று அவரது வீட்டு குளியலறையில் வழுக்கி விழுந்து இறந்தார். அவருக்கு வயது 70.
1977ல் எம்ஜிஆரின் அமைச்சரவையில் சமூகநலத்துறை அமைச்சராக இருந்தவர் பி.டி.சரஸ்வதி. திருமணம் செய்து கொள்ளவில்லை. சென்னை நந்தனத்தில் உள்ள வீட்டில் அவர் மட்டும் தனியாக வசித்து வந்தார்.
நிம்மு வசந்த் என்ற சமூக சேவகி அவரை கவனித்து வந்தார். வெளியில் சென்று வருவதற்கு ஆட்டோ டிரைவர் ஒருவரை நியமித்திருந்தார் சரஸ்வதி.
இந்நிலையில் நேற்று காலை சுமார் 10.30 மணிக்கு ஆட்டோ டிரைவருக்கு போன் செய்து வெளியே செல்ல வேண்டும் மதியம் 2.30 மணிக்கு ஆட்டோவை கொண்டு வருமாறு கூறியுள்ளார். மதியம் வீட்டுக்கு வந்த ஆட்டோ டிரைவர் நீண்ட நேரம் கதவை தட்டியுள்ளார். ஆனால், உள்ளிருந்து எந்த பதிலும் வரவில்லை.
இதையடுத்து சரஸ்வதி வேறு ஆட்டோவில் சென்றிருக்கலாம் என நினைத்து ஆட்டோ டிரைவர் சென்றுவிட்டார். பின்னர் மாலை 6 மணிக்கு ஆட்டோ டிரைவர் மீண்டும் வந்து கதவை தட்டி பார்த்தார். பின்னர் அவரது மொபைலுக்கு தொடர்பு கொண்டார். அப்போது அவர் மொபைல் வீட்டுக்குள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சந்தேகமடைந்த ஆட்டோ டிரைவர், வார்டு கவுன்சிலர் சைதை ரவி மூலம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக வந்த போலீசார் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அப்போது பி.டி.சரஸ்வதி குளியலறையில் தலையில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications