3ல் கொங்கு வேளாளர் கட்சியால் தோற்றோம்-காங்
சென்னை: தமிழகத்தில் 16 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. 7 இடங்களில் தோல்வியடைந்துள்ளது. 3 தொகுதிகளில் தனது தோல்விக்கு கொங்கு வேளாளர் கட்சி பிரித்த வாக்குகளே காரணம் என காங்கிரஸ் கூறுகிறது.
அதிமுகவிடம் இழந்த 4:
சேலம், திருப்பூர், மயிலாடுதுறை, திருச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுகவிடம் காங்கிரஸ் தோற்றுள்ளது.
கம்யூனிஸ்டுகளிடம் இழந்த 2:
கோவை தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடமும், தென்காசி தொகுதியை இந்திய கம்யூனிஸ்டிடமும் காங்கிரஸ் இழந்துள்ளது.
மதிமுகவிடமும் தோல்வி..
மதிமுகவிடம் ஈரோடு தொகுதியை காங்கிரஸ் இழந்துள்ளது.
அக்கட்சியைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கடும் இழுபறிக்குப் பின் வெறும் 3,000 பிளஸ் வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றுள்ளார்.
தோல்விக்கு கொங்கு வேளாளர் கட்சியே காரணம்-காங்:
3 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு கொங்கு வேளாளர் கட்சியே காரணம் என்று சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவர் சுதர்சனம் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
புதிதாக துவக்கப்பட்டுள்ள கொங்கு வேளாளர் கட்சி பிரித்த வாக்குகளால் தான் சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்திக்க வேண்டியதாயிற்று.
என் தோல்வி ஆச்சரியம் அளிக்கிறது..தங்கபாலு:
சேலத்தில் தோற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறுகையில்,
கடந்த 5 ஆண்டுகளாக சேலம் மக்களுக்கு நிறைய நலத் திட்டங்கள் செய்துள்ளேன். எனது பதவிக் காலத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் சேலம் கண்டுள்ளது. எனக்கு வாக்களித்த மக்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.
தேர்தலில் நான் தோல்வி அடைந்தது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. தோல்விக்கான காரணம் தெரியவில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சில இடங்களில் தோல்வி அடைந்ததற்காக கட்சியின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நான் விலக வேண்டிய அவசியம் இல்லை என்றார் தங்கபாலு.
கடந்த முறை தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 10 எம்பிக்கள் இருந்தனர். அது இம்முறை 9 ஆகிவிட்டது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications