இன்று அதிமுக செயற்குழு-தோல்வி குறித்து ஆய்வு

இன்று மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்கும் இக் கூட்டத்தி்ல் உள்கட்சி தேர்தலை நடத்துவது உள்ளிட்ட சில அறிவிப்புகளை ஜெயலலிதா வெளியிடலாம் என்று தெரிகிறது.
அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை வகிக்க அனைத்து மாவட்டச் செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் இக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் அடுத்து அமையப் போகும் ஆட்சியை நிர்ணயிக்கப் போகிறவர் ஜெயலலிதா தான் என்று வட இந்திய மீடியாக்களும் சில தமிழக மீடியாக்களும் ஊதிவிட்ட நிலையில் மிக நம்பிக்கையோடு தேர்தலை சந்தித்தது அதிமுக.
இதனால் மூன்றாவது அணியிலும் வெளியிலுமாக இருந்த ஜெயலலிதா வளைக்க குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மூலம் வலை வீசியது பாஜக.
தேர்தல் அன்று நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதா, முடிவுகள் வெளியானதும் டெல்லி சென்று ஆக வேண்டியதைப் பார்ப்பேன் என்றார் பெருத்த நம்பிக்கையுடன்.
ஆனால், 9 இடங்களில் மட்டுமே அதிமுக வென்றது. இவரை நம்பி கூட்டணி சேர்ந்த பாமக 7 தொகுதிகளிலும் 7 டன் மண்ணைக் கவ்வியது.
மதிமுகவுக்கும் இரு இடதுசாரிகளுக்கும் தலா ஒரு இடமே தப்பியது.
இதனால் அடுத்த 5 வருடத்துக்கு தேசிய அளவில் அதிமுக பக்கம் திரும்பிப் பார்க்கக் கூட யாருமில்லாத நிலையில் மீண்டும் மாநில அரசியலில் தனது தீவிர கவனத்தை திருப்பவுள்ளார் ஜெயலலிதா.
தேர்தல் தோல்விக்கு மின்னணு எந்திரத்தின் மீது ஜெயலலிதா பழியைப் போட்டாலும் கூட, இன்றைய கூட்டத்தில் தோல்விக்கான உண்மையான காரணம் குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
மேலும் ஜெயலலிதா ஏற்கனவே தோற்ற பர்கூர் உட்பட நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால் அதற்கு கட்சியை தயார் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு முன் உட்கட்சித் தேர்தலை நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கவும் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
-
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications