கற்பழித்து சித்திரவதை-மலேசிய இளவரசர் மீது மனைவி புகார்

மலேசியாவின் கேளந்தன் மாநில ராஜ குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் தெங்கு டிமென்காங் முகம்மத் பக்ரி. 31 வயதான இவர் சமீபத்தில் இந்தியனேசியாவை சேர்ந்த 17 வயதான அமெரிக்க மாடல் மனோகரா ஒடேலியா பினோட் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்த சமயத்தில் இருந்தே இளவரசர் தனது மனைவியை கொடுமைப்படுத்தியதாகத் தெரிகிறது. இதையடுத்து இளவரசி பினாத் பலமுறை தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால், ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் அவரை வெளியில் விடவில்லை.
இது குறித்து பினாத்தின் தாயார் பல முறை மலேசியா மற்றும் இந்தோனேசிய அரசிடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை.
அவர் கூறுகையில், என் மகளை இளவரசர் கொடுமைப்படுத்துகிறார். அவளை அடித்து துன்புறுத்துகிறார். அவளது மார்பு பகுதியில் கத்தியால் கீறி சித்திரவதை செய்துள்ளார். தனது மகள் இப்படி காட்டுமிராண்டித்தனமான கொடுமைகளை அனுபவிப்பதை எந்த பெற்றோர்களும் பார்த்து கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள்.
இது குறித்து மலேசிய அரசிடம் முறையிட்ட போது அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. என்னை மலேசியாவுக்குள் நுழைய விடாமல் அரசு தடுத்து வி்டடது என்றார்.
இந்நிலையில் சமீபத்தில் இளவரசரின் தந்தையின் மருத்துவ சிகிச்சை தொடர்பாக இளவரசர் மற்றும் குடும்பத்தார் சென்றிருந்தனர். அப்போது அவர்களுடன் சென்ற பினாத் சிங்கப்பூர் போலீசாருக்கு ரகசியமாக தகவல் தெரிவித்து கொடூர இளவரசனிடம் இருந்து தப்பித்துள்ளார்.
அவர் கூறுகையில்,
என்னை இளவரசர் செக்ஸ் அடிமை போல் நடத்தினார். நான் விரும்பாத சமயங்களில் என்னை தொந்தரவு செய்து கற்பழித்தார். தாக்கப்பட்டு, சித்திரவதைக்கு ஆளாகி அந்த துன்பத்தை தாங்கி கொள்வதே எனது தினசரி நடவடிக்கை ஆகிவிட்டது.
இதை நான் வெளியில் சொல்ல முயன்ற போது எனக்கு மயக்க ஊசி போட்டுவிட்டார். சில சமயங்களில் எனக்கு போதை மருந்தும் ஏற்றிவிட்டார். இதனால் எனக்கு ரத்த வாந்தி ஏற்பட்டது. பல முறை என் உடலின் பல பகுதிகளில் கத்தியால் கீறியுள்ளார். சாதாரண மனிதர்களால் இது போன்ற வக்கிரங்களை செய்ய முடியாது.
அவர்களுடன் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சமயத்தில் நான் இந்த வலிகளை வெளிகாட்டாமல் சிரித்து கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் வீட்டுக்கு வந்தவுடன் மீண்டும் சித்திரவதை ஆரம்பமாகிவிடும்.
நான் ஒவ்வொரு முறையும் துன்பப்படும் போது, அது குறித்து எனது தாயார் புகார் செய்யும் போதும் இந்தோனேசிய அரசு நான் நன்றாக இருப்பதாக கூறி ஏமாற்றியது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications