தமிழகத்தில் இன்றும் இடியுடன் மழை பெய்யலாம்
சென்னை: தென் மேற்கு பருவ மழை மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளதால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் கூறுகையில், தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சென்னையில் சில பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். பகலில் 105 அல்லது 106 டிகிரி வெயில் அடிக்கும் என்று தெரிவித்துள்ளது.
அதற்கேற்ப காலை முதல் நல்ல வெயில் அடித்து வருகிறது. அதேசமயம், மேக மூட்டமும் அவ்வப்போது காணப்படுகிறது.
செனனையில் நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. மாலையில் நல்ல காற்று வீசியது. இரவில் சென்னை புறநகர்ப் பகுதிகளில் லேசான மழை இருந்தது.
பஸ்சில் மின்னல் தாக்கி 7 பேர் காயம்:
இதற்கிடையே சென்னையில் அரசு பஸ் ஒன்றின் மீது மின்னல் தாக்கியதில் 7 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் நேற்று பகல் கடுமையான வெயில் அடித்து மக்களை வாட்டி வதைத்தது. ஆனால் இரவு சுமார் 8.30 மணிக்கு எதிர்பாராத வகையில் இடி, மின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்தது.
எழும்பூர், புரசைவாக்கம், ஆயிரம்விளக்கு, நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், ராயப்பேட்டை என பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததால் சாலைகளிலும், தெருக்களிலும் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில் கும்மிடிப்பூண்டிக்கு பக்கத்தில் இருக்கும் கவரப்பேட்டை என்னும் இடத்தில் ரோட்டில் போய் கொண்டிருந்த பஸ் ஒன்றின் மீது மின்னல் தாக்கியது. இதில் பஸ்சின் முன் கண்ணாடி உடைத்து நொறுங்கியது.
இதையடுத்து பயணிகள் அலறி அடித்து கொண்டு பஸ்சில் இருந்து வெளியே வந்தனர். பஸ்சின் முன் பகுதியில் அமர்ந்திருந்த அம்சா (30), குட்டியம்மா (38), பார்த்திபன் (12), செல்வம் (13), ராணி (40), அபிநயா (14), பிருந்தா (17) ஆகிய 7 பேர் காயமடைந்தனர்.
அவர்கள் அனைவரும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிக்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications