குடிநீர்-காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்
புளியங்குடி: நெல்லை அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
நெல்லை மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே சங்கனபேரி கிரமாத்தில் சுமார் 300 வீடுகள் உள்ளன. இப்பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு ஆழ்குழாய் கிணறுகள் இணைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் அந்த ஆழ்குழாய் கிணறுகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் பொதுமக்களுக்கு சீரான குடிநீரை விநியோக்க முடியவில்லை. இதையடுத்து இருக்கும் தண்ணீரை பலருக்கும் பகிர்த்து அளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் அந்த தண்ணீரும் சுகதாராமற்ற நிலையில் வருகிறது.
இதுபற்றி பஞ்சாயத்து தலைவரிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சங்கனபேரி கிராமத்தை சேர்ந்த பெண்கள் வாசுதேவநல்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிகுடங்களுடன் நேற்று முற்றுகையிட்டனர்.
மேலும் சுகாதாரமற்ற தண்ணீரையும் கொண்டு சென்றனர். அப்போது அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து பொதுமக்கள் சார்பில் குடிநீருக்காக புதிய கிணறு தோண்ட வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications