மாணவன் மீது மோதல்-புதுக்கோட்டையில் பஸ் எரிப்பு
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவன் ஒருவன் பஸ் மோதி பலியானதை அடுத்து ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் மற்றொரு பஸ்சை தீவைத்து கொளுத்தினர்.
புதுக்கோட்டை திருமயம் குறிஞ்சிப்பட்டியைச் சேர்ந்தவர் சாத்தையா. இவர் ராயபுரம் அருகே உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று மாலை பள்ளி விட்டு வீடு திரும்பிக் கொண்டு இருந்த போது சுப்புரமணியன் பாலிடெக்னிக்கை சேர்ந்த பஸ் ஒன்று அவர் மீது மோதியது. இதில் மாணவன் சாத்தையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இந்த தகவல் அறிந்த பொதுமக்கள் ஆவேசம் அடைந்தனர். இதனால் அப்பகுதி மக்கள் அருகில் இருந்த பஸ் ஒன்றை தீ வைத்து கொளுத்தினர். இதில் அந்த பஸ் முற்றிலுமாக எரிந்து நாசமானது.
இச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications