கல்பாக்கம்-கூடங்குளம் அணு உலைகள் அருகே மீன் பிடிக்க தடை!

கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் வழியாக வந்து மும்பையில் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதையடுத்து மத்திய அரசு இந்திய கடலோர பகுதிகளில் பாதுகாப்பை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இந் நிலையில் மும்பை தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஹபீஸ் சையத்தை பாகிஸ்தான் நீதிமன்றம் வீட்டுகாவலில் இருந்து விடுவித்தது. இதையடு்தது தென் இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை அளித்தது.
இதைத் தொடர்ந்து தென் இந்தியாவில் கடலோர பகுதிகளில் உள்ள கூடங்குளம், கல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பை உஷார் நிலையில் வைத்திருப்பது குறித்த மத்திய உள்துறை அமைச்சகம் கூட்டம் டெல்லியில் நடந்தது.கூட்டத்துக்கு உள்துறை செயலர் மதுகர் குப்தா தலைமை தாங்கினார்.
அந்தக் கூட்டத்தில், கூடங்குளம், கல்பாக்கம் அணு மின் நிலையங்களுக்கு 500 மீட்டர் சுற்றளவில் கடலில் மீன் பிடிக்க தடை விதிப்பது என முடிவு செய்யப்பட்டது.
தமிழக கடல் பகுதி வழியாக விடுதலைப் புலிகள், இந்தியாவுக்குள் நுழைந்து விடக்கூடாது என்பதையும் தீவிரமாக கண்காணிக்கவும் முடிவெடுக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications
