இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்கள் ராமேஸ்வரம் திரும்பினர்
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் அட்டூழியமாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 9 ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு நேற்று ஊர் திரும்பினர்.
கடந்த 8-ந் தேதி மீன்பிடிக்க சென்ற தேவதாஸ், பைராம்கான் ஆகியோருக்கு சொந்தமான இரண்டு படகுகளையும், அவற்றில் இருந்த 9 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனர்.
இந்த படகுகளையும், மீனவர்களையும் மன்னார் போலீஸ் நிலையத்தில் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர்.
மன்னார் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த 9 மீனவர்களையும் அனுராதபுரம் சிறையில் அடைத்தனர்.
அவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்தி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு நேற்று முன்தினம் கடிதம் ஒன்றை எழுதினார். மேலும் மீனவர்களை மீட்கவும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன.
இதையடுத்து 9 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.
நேற்று மாலை 3 மணியளவில் இந்த 9 பேரும், அவர்களது படகுகளும் இந்திய கடலோரக் காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் இரவு 9 மணியளவில் ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications