கலைஞர் அரங்கம் கட்ட எதிர்ப்பு-கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் கலைஞர் அரங்கம் கட்டுவதற்கு, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து மன்றக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். சர்வ கட்சி சார்பில் ஊர்வலம் நடத்தினர்.
ராமேசுவரம் நகராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவர் ஜலீல் தலைமையில், ஆணையர் போஸ் முன்னிலையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், ராமேஸ்வரம் பாண்டியன் நகரில் கலைஞர் அரங்கம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில முக்கிய கோரிக்கைளை திமுக கவுன்சிலர்கள் முன் வைத்தனர்.
ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, மார்க்சிய கம்யூனிஸ்ட், பாஜக ஆகிய கட்சிகளின் கவுன்சிலர்கள் 9 பேர் வெளிநடப்பு செய்தனர்.
ஆனால், இந்த தீர்மானத்திற்கு 12 கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் தீர்மானம் வெற்றி பெற்றது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக கூட்டணி கவுன்சிலர்கள் மற்றும் அதிமுக நகரச் செயலர் பெருமாள், மதிமுக நகரச் செயலர் பாஸ்கரன், இளைஞரணி செயலாளர் இளங்கோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் கருணாகரன், செந்தில், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலாளர் முருகானந்தம், தேமுதிக மாவட்ட துணைச் செயலாளர் முத்துகாமாட்சி, தெட்சிணாமூர்த்தி,
பாமக நகரச் செயலர் முருகன் உள்ளிட்ட சர்வ கட்சி பிரமுகர்கள் ஊர்வலமாகச்சென்று, ராமேசுவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி ஆய்வு செய்து கொண்டிருந்த மாவட்டக் கலெக்டர் வாசுகியிடம் புகார் மனு அளித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications