பி.இ. சேர்க்கை: ரேங்க் பட்டியல் வெளியீடு-12 பேர் முதலிடம்

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேர 1,32,000 மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளனர்.
அரசு ஒதுக்கீடு மற்றும் சுய நிதிக் கல்லூரிகளின் ஒதுக்கீட்டையும் சேர்த்து மொத்தம் 85,000 இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும்.
கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களுக்கு 200 கட்-ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கணிதத்திற்கு மட்டும் 100 மதிப்பெண்ணும், மற்ற இரு பாடங்களுக்கும் தலா 50 மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
இதன் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ரேங்க் பட்டியலை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். நிகழ்ச்சியில் துணைவேந்தர் மன்னர் ஜவகர், உயர் கல்வித்துறைச் செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ரேங்க் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்திலும் காண முடியும்.
கீழ்க்கண்ட முகவரிக்குச் சென்று அதை அறியலாம்...
http://www.annauniv.edu/tnea2009/rank.html
இது குறித்து பொன்முடி நிருபர்களிடம் கூறுகையில்,
என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்காக 1,32,264 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதில் தகுதியற்ற 7,037 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. தகுதியான 1,25,227 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டன.
ரேங்க் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்களில் 14,539 பேர் உயர் வகுப்பை சேர்ந்தவர்கள். 60,755 பேர் பிற்படுத்தப்பட்டோர், 5,586 பேர் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பை சேர்ந்தவர்கள்,
27,704 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், 14,730 பேர் தாழ்த்தப்பட்டோர் ஆவர். அருந்ததிய இனத்தை சேர்ந்த 1,544 பேரும், பழங்குடி இனத்தை சேர்ந்த 369 பேரும் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களில் மாணவர்கள் 76,179. மாணவிகள் 49,048 பேர் ஆவர்.
என்ஜினீயரிங் கவுன்சிலிங் 5ம் தேதி தொடங்குகிறது. அன்று விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். தொழில் படிப்புக்கான கவுன்சிலிங் 6ம் தேதி தொடங்குகிறது. இதற்கான கட்ட ஆப் மார்க் 194-182.5
7ம் நடக்கும் கவுன்சிலி்ங்குக்கான கட் ஆப் மார்க்: 182.5-169
8ம் தேதி கவுன்சிலி்ங்குக்கான கட் ஆப் மார்க்: 168.75-156.
உடல்- ஊனமுற்றோருக்கான கவுன்சிலிங் 9ம் தேதி நடைபெறும். இதற்கான கட் ஆப் மார்க் 161-76.25.
பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் 10ம் தேதி தொடங்குகிறது. முதல் நாள் கலந்தாய்வில் 2,000 பேர் பங்கேற்கிறார்கள். இவர்களுக்கான கட்- ஆப் மார்க்-200-199.
மற்ற நாட்களில் தலா 3,000 பேர் பங்கேற்க அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களுக்கான கட் ஆப் மார்க் விவரம்:
11ம் தேதி கவுன்சிலிங்குக்கான கட் ஆப் மார்க்: 198.75-197.
12ம் தேதி கவுன்சிலிங்குக்கான கட் ஆப் மார்க்: 196.75-195
13ம் தேதி கவுன்சிலிங்குக்கான கட் ஆப் மார்க்: 194.75-193
14ம் தேதி கவுன்சிலிங்குக்கான கட் ஆப் மார்க்: 192.75-191
15ம் தேதி கவுன்சிலிங்குக்கான கட் ஆப் மார்க்: 190.75-189
16ம் தேதி கவுன்சிலிங்குக்கான கட் ஆப் மார்க்: 188.75-187
18ம் தேதி கவுன்சிலிங்குக்கான கட் ஆப் மார்க்: 186.75-183
19ம் தேதி கவுன்சிலிங்குக்கான கட் ஆப் மார்க்: 182.75-181
20ம் தேதி கவுன்சிலிங்குக்கான கட் ஆப் மார்க்: 180.75-179
21ம் தேதி கவுன்சிலிங்குக்கான கட் ஆப் மார்க்: 178.75-177
22ம் தேதி கவுன்சிலிங்குக்கான கட் ஆப் மார்க்: 176.75-175
கடைசி நாளான 29ம் தேதிக்கான கட்ட ஆப் மார்க் 162.75-161
கவுன்சிலிங் காலை 7.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். முதல் கட்ட கலந்தாய்வில் 60,000 பேர் கலந்து கொள்கிறார்கள்.
அதிக கட்டணம் வசூலித்ததாக புகார் கூறப்பட்ட 4 கல்லூரிகள் மீது அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளோம். மீண்டும் அந்த கல்லூரிகளில் சோதனை நடத்தப்படும்.
சுயநிதி கல்லூரிகள் தங்கள் கடமையை உணர்ந்து கட்டணத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications