எல்லையில் பாக். துப்பாக்கிச் சூடு-இந்திய வீரர் பலி
ஸ்ரீநகர்: எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.
இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே 2003ம் ஆண்டு போர் நிறுத்தம் அமலில் உள்ளது. ஆனால், பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறி இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை பாகிஸ்தான் இதுவரை 30 முறை இது போல் தாக்குதல் நடத்தியிருப்பதாக ராணுவ அமைச்சர் ஏகே அந்தோணி தெரிவித்துள்ளார்.
மேலும், பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைவதற்கு உதவி செய்யும் வகையில் இந்திய ராணுவத்தின் கவனத்தை திசை திருப்பும் விதமாக பாகிஸ்தான் இது போன்ற செயல்களை செய்து வருகிறது.
இந்நிலையில் நேற்று ஜம்மு, காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் குமோன் 8 ராணுவ படையை சேர்ந்த மொகிந்தர் சிங் என்ற இந்திய ராணுவ வீரர் உயிரிழந்தார். மற்றொரு ராணுவ வீரர் மயிரிழையில் உயர் தப்பினார்.
இது குறித்து இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், நேற்று மாலை தீவிரவாதிகள் சிலர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றுள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியிருக்கலாம் என்றார்.
இது தொடர்பாக இந்திய ராணுவ அதிகாரிகள் பாகிஸ்தானிடம் விளக்கம் கேட்க இருக்கின்றனர். இது இந்தாண்டு பூஞ்ச் பகுதியில் நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் சம்பவமாகும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications