வங்கி மேனேஜரை அடித்த காங். எம்.பி. மீது வழக்கு-சோனியா நோட்டீஸ்
ஹைதராபாத்: தான் பரிந்துரைக் கடிதம் கொடுத்த விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்காததால் ஆத்திரமடைந்து வங்கி மேனேஜரை மிருகத்தனமாக அடித்து உதைத்த காங்கிரஸ் எம்.பி. மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட எம்.பிக்கு விளக்கம் அளிக்குமாறு கூறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஆந்திர மாநிலம் நாகர்கர்னூல் தொகுதி எம்.பியாக காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மன்டா ஜெகன்னாதம். இவர் தன்னை அணுகிய விவசாயிகளுக்கு கடனுதவி அளிக்குமாறு ஆந்திர பிரதேசஷ் கிராமீன் விகாஸ் வங்கிக்கு பரி்ந்துரைக் கடிதம் தந்தார்.
ஏகப்பட்ட பேருக்கு கடிதம் கொடுத்ததால் அதை வாங்க மறுத்து விட்டார் வங்கி மேலாளர் ரவீந்தர் ரெட்டி.
இதையடுத்து வங்கிக்கு விரைந்த எம்.பி. தாறுமாறாகப் பேசியபடி மேனேஜரை அத்தனை பேர் முன்னிலையிலும் கடுமையாக தாக்கி விட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விவகாரம் குறித்து ரவீந்தர் ரெட்டி கூறுகையில், எம்.பி. நிறையப் பேருக்கு பரிந்துரைக் கடிதங்களைக் கொடுத்திருந்தார். அத்தனை பேருக்கும் ஒரே நாளில் லோன் வழங்க முடியாது. காரணம், ஏகப்பட்ட பார்மாலிட்டிகள் உள்ளன. அவற்றை முடிக்காமல் எப்படி கடன் தர முடியும்.
இதை நான் அவரிடம் விளக்கிக் கூறியபோதும், அதை ஏற்க மறுத்து என்னை அடித்து விட்டார் என்றார்.
ஆனால் மேனேஜர் குடிபோதையில் இரு்நததாகவும், தன்னிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகவும் கூறியுள்ளார் எம்.பி.
இந்த நிலையில் போலீஸார் எம்.பி. மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சோனியா நோட்டீஸ்...
இதற்கிடையே, நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி எம்.பி. ஜெகன்னாதத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications