சென்னையின் மையப் பகுதியில் கன்னடக் கவிஞருக்கு சிலை- கன்னட அமைப்பு புது நிபந்தனை

பெங்களூர் அல்சூர் ஏரிப் பகுதியில் தமிழ்ச் சங்கம் சார்பில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையைத் திறக்க விடாமல் அங்குள்ள கன்னட அமைப்புகள் இடையூறு செய்து வருகின்றன.
பல ஆண்டுளாக சாக்குப் பையில் மூடிக் கிடக்கிறது வள்ளுவர் சிலை.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண கன்னடக் கவிஞர் சர்வஞ்னாவின் சிலையை சென்னை அயனாவரத்தில் எழுப்ப அனுமதிக்கலாம் என தீர்வு கூறப்பட்டது. இதை கன்னட அமைப்புகள், கர்நாடக அரசு ஆகியவை ஏற்றுக் கொண்டன.
இதையடுத்து சமீபத்தில் சென்னைக்கு வந்த கர்நாடக முதல்வர் எதியூரப்பா, பெங்களூர் திருவள்ளுவர் சிலைத் திறப்புக்கு வருமாறு முதல்வர் கருணாநிதிக்கு அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில் கன்னட ரக்சன வேதிகே என்ற கன்னட அமைப்பு புதுப் பிரச்சினையைக் கிளப்பியுள்ளது. சென்னை நகரின் மையப் பகுதியில், சர்வஞ்னரின் சிலையை வைத்தால்தான் திருவள்ளுவர் சிலையைத் திறக்க அனுமதிப்போம் என அந்த அமைப்பின் தலைவர் நாராயண கெளடா கூறியுள்ளார்.
கர்வார் வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை நகரின் மையப் பகுதியில் சர்வஞ்னரின் சிலை திறக்கப்பட வேண்டும். ஆனால் அயனாவரத்தில் உள்ள கன்னட பவனின் வளாகத்திற்குள் அந்த சிலையை திறக்க சதி நடக்கிறது.
இதை அனுமதிக்க முடியாது. சென்னையின் மையப் பகுதியில் சர்வஞ்னரின் சிலையைத் திறந்தால்தான் வள்ளுவர் சிலையைத் திறக்க அனுமதிப்போம் என்றார்.
மேலும், அடுத்த மாதம் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம், பெல்காம் பிரச்சினை உள்ளிட்டவை குறித்து மனு அளிக்கப் போவதாகவும் கெளடா தெரிவித்தார்.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications