சென்செக்ஸ் இரண்டாவது நாளாக 400 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு!
மும்பை: தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்திய பங்குச் சந்தையில் காளையின் துள்ளல் தொடர்கிறது.
பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த மும்பை பங்குச் சந்தை, நேற்று செவ்வாய்க்கிழமை 453 புள்ளிகள் உயர்வைச் சந்தித்து, 13,853 புள்ளிகளாக உயர்ந்தது.
இந்த நிலை இன்றும் தொடர்ந்ததால் சென்செக்ஸில் 436 புள்ளிகள் உயர்ந்தன.
கடந்த ஒரு வாரகாலத்தில் 10 சதவீத அளவுக்குச் சரிவைச் சந்தித்து, ரூ 1.70 லட்சம் கோடிகளுக்கும் மேல் இழந்த பங்குச் சந்தை கடந்த இரு தினங்களாக மீண்டு வருகிறது.
தனியார் முதலீடுகள் முடங்கியுள்ள நிலையில் பொருளாதாரத்தை ஊக்குவிக்க அரசு பெருமளவில் கடன் வாங்க முடிவு செய்துள்ளது. இதை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்த பிறகுதான் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை உருவானது.
மேலும் அமெரிக்கா தவிர்த்த பிற நாடுகளில் பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகள் தெரியத் துவங்கியிருப்பதும் இந்த சாதகமான போக்கு நிலவக் காரணம் என்று கூறப்படுகிறது.
இன்று வர்த்தகம் துவங்கிய சிறிது நேரத்தில் மளமளவென சென்செக்ஸ் குறியீட்டெண்கள் உயர்ந்தன.
வர்த்தக நேரம் முடிவுறும் தருவாயில் 400 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு கண்டுள்ளது சென்செக்ஸ். நிப்டியில் 134 புள்ளிகள் உயர்ந்துள்ளது. புளூ சிப் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் நல்ல லாபத்தில் கைமாறின. நடுத்தர மற்றும் சிறிய ரக பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கும் இன்று லாபம் கிடைத்தது.
இன்போஸிஸ் மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனப் பங்குகள் மட்டுமே இன்று நஷ்டத்தைச் சந்தித்தன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications