மேட்டூருக்கு அதிகளவில் நீர் வரத்து - காவிரியில் வெள்ளப் பெருக்கு
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு அபரிமிதமான அளவில் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கர்நாடகம் மற்றும் கேரளாவில் பலத்த மழை பெய்து வருவது. பருவ மழை தீவிரமடைந்திருப்பதால் கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
கபிணி அணை ஏற்கனவே நிரம்பி விட்டது. இதையடுத்து அங்கிருந்து உபரி நீர் பெருமளவில் திறந்து விடப்படுகிறது. இதேபோல கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்தும் பெருமளவில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இந்தத் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 54 ஆயிரத்து 567 கன அடி நீர் வந்தது.
அணையின் நீர்மட்டம் 74.28 அடியாக இருந்தது. அணைக்கு தொடர்ந்து அதிக அளவில் நீர்வந்து கொண்டிருப்பதால் இன்னும் ஒரு சில நாட்களில் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
90 அடியை அணை எட்டினால் பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விடப்படும்.
தற்போது மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications