ஜாக்சன் டாக்டர் வீட்டில் போலீஸார் மீண்டும் ரெய்டு
லாஸ் வேகாஸ்: லாஸ் வேகாஸில் உள்ள மைக்கேல் ஜாக்சனின் டாக்டர் கான்ராட் முர்ரேவின் வீட்டை போலீஸார் மீண்டும் முற்றுகையிட்டு சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது செல்போன்கள், ஒரு கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
டாக்டர் மீதான சந்தேகம் மேலும் வலுத்துள்ளதைத் தொடர்ந்து இந்த 2வது சோதனை நடைபெற்றுள்ளது.
டாக்டர் கடைசி நேரத்தில் கொடுத்த அதிக அபாயகரமான மயக்க மருந்தே ஜாக்சனின் உயிரைக் குடித்ததாக தகவல் வெளியான அடுத்த நாளே இந்த சோதனை நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து முர்ரேவின் வழக்கறிஞர் எட் செர்னாப் கூறுகையில், ஹூஸ்டன் அலுவலகத்தில் கடந்த வாரம் சோதனை நடந்தது. இந்த நிலையில் லாஸ் வேகாஸில் உள்ள டாக்டர் முர்ரேவின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
கொலைக் குற்றத்திற்கான ஆதாரத்தைத் திரட்டும் வகையில் இந்த சோதனை நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாக்சன் தொடர்பான மருத்துவ ஆவணங்களை போலீஸார் தேடினர். மேலும், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆதாரங்களையும் தேடினர்.
சோதனை நடந்தபோது டாக்டர் முர்ரேவும் வீ்ட்டில் இருந்தார். கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் சோதனை நடைபெற்றது. அதிகாரிகளுக்கு உதவினார், ஒத்துழைத்தார் என்றார்.
ஜாக்சனுக்கு டாக்டர் முர்ரே கொடுத்த புரபஃபால் மயக்க மருந்தே அவரது மரணத்திற்குக் காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக இந்த மருந்து கொடுக்கப்பட்டதால்தான் ஜாக்சன் மரணத்தைச் சந்தித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே விரைவில் ஜாக்சன் மரணத்திற்கான காரணத்தை தெரிவிக்கவிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications