நாகர்கோவில் அருகே போலீஸ் - வக்கீல்கள் மோதல்
நாகர்கோவில்: நாகர்கோயில் அருகே காவல் நிலையத்தில் வழக்கு விசாரணை தொடர்பாக வக்கீலுக்கும், போலீசாருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாகர்கோவிலை சேர்ந்த வக்கீல்கள் மணிகண்டன், சுபாஷ், ரமேஷ் ஆகியோர் தக்கலை போலீஸ் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு சென்றுள்ளனர்.
சிவில் வழக்கு என்பதால் முதலில் வாதி, பிரதியிடம் பேசுவதாகவும், வக்கீல் உட்பட வேறு அனைவரும் வெளியே செல்லுமாறும் இன்ஸ்பெக்டர் சுதேசன் என்பவர் கூறியுள்ளார்.
இதற்கு வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கும் வக்கீல்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தகவல் அறிந்த வக்கீல்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இன்ஸ்பெக்டர் சுதேசன் மீது நடவடிக்கை எடுக்க கோரி திடீர் ஆர்பாட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்த எஸ்.பி. சண்முகவேல் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது.
ஆனால், வக்கீல் தரப்பிலும், போலீஸ் தரப்பிலும் தனித்தனியே புகார்கள் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்ஸ்பெக்டர் சுதேசன் தக்கலை மருத்துவமனையில் உடல் நலம் சரியில்லை என்று கூறி சேர்ந்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications