கோயில் விழாவில் குத்தாட்டம் - தடுத்த போலீஸுக்கு அடி
வள்ளியூர்: வள்ளியூர் அருகே கோயில் திருவி்ழாவில் குத்தாட்டம் போட்டதை தடுத்த போலீசாரை ஒரு கும்பல் சராமரியாக தாக்கியது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
வள்ளியூர் அருகேயுள்ள நம்பியான்விளை பத்ரகாளியம்மன் கோவில் கொடைவிழா நேற்று துவங்கியது. இதையொட்டி நேற்றிரவு சிறுவர், சிறுமியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. சினிமா பாடல்களுக்கு ஏற்றவாறு சிறுவர், சிறுமிகள் ஆடிக் கொண்டிருந்தனர்.
குத்துப்பாடல்களுக்கு சிறுவர்கள் போட்ட ஆட்டம் பார்வையாளர்கலையும் வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து கூட்டத்திலிருந்த சிலர் மேடைக்கு முன்பு சென்று ஆடத் துவங்கினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் நந்தகோபால் என்பவர் குத்தாட்டம் போட்டவர்களை கண்டித்தார்.
ஆனால் பாடல் மயக்கத்தில் ஆடிக் கொண்டிருந்தவர்களுக்கு போலீஸ்காரரின் எச்சரிக்கை காதில் விழவி்ல்லை.
உற்சாகத்தில் ஒரு சிலர் ஆடியதை பார்த்த மேலும் சிலருக்கு மேடை முன்பு ஆடத் தோன்றியது. பார்வையாளர்களின் விசில் சத்தம் வேறு அவர்களை உற்சாகப்படுத்தவே சிறிது நேரத்தில் ஆட்டம் போடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே சென்றது.
இதையடுத்து மேடை முன்பு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் விதத்தில் ஆட்டம் போட்ட இருவரை போலீஸ்காரர் நந்தகோபால் பிடிக்க முயன்றார்.
இதனால் ஆத்திரமடைந்த 20க்கும் மேற்பட்டோர் அவரை அவதூறாக பேசி கீழே தள்ளி தாக்கியனர். பின்னர் ஆட்டம் போட்ட இருவரையும் மீட்டு சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் ஜான்கென்னடி, சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அதே ஊரை சேர்ந்த ராஜதுரை, வெள்ளத்துரை, செல்வராஜ் மகன் முத்து, ஜெயராம், இசக்கி்முத்து ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் பலரை தேடி வருகின்றனர்.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications