சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மேலும் 3 நீதிபதிகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மேலும் 3 புதிய நீதிபதிகளை நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பரிந்துரைக்கப்பட்டுள்ள 3 பேருமே மாவட்ட நீதிபதிகள் ஆவர். உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் ஆறுமுக சாமி, தமிழ்நாடு மாநில சட்ட சேவை ஆணைய உறுப்பினர்-செயலாளர் மதிவாணன், பதிவாளர் (விஜிலென்ஸ்) கே.பி.கே.வாசுகி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நான்கு நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. விரைவில் நீதிபதி பிரபுல்ல குமார் மிஸ்ரா, பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ளார். அவரது இடம் காலியானால் எண்ணிக்கை 5 ஆக உயரும்.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையின் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 60 என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications