வாக்குசீட்டு முறை தான் இந்தியாவுக்கு ஏற்றது-மதுரை ஆதினம்
காஞ்சிபுரம்: மின்னணு வாக்குப்பதிவு முறையை பல நாடுகள் தவிர்த்துவிட்டன. இந்தியாவுக்கு வாக்குசீட்டு முறை தான் நல்லது. அதை மீண்டும் பயன்படுத்த வேண்டும் என என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
மதுரை ஆதினம் ஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நேற்று காஞ்சிபுரம் வந்தார்.
அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இடைத்தேர்தலால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது. இடைத்தேர்தல்களை நடத்தாமல் அவற்றை பொது தேர்தலோடு சேர்த்து நடத்த வேண்டும். அதற்கான சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்துவதை பல நாடுகள் தவிர்த்து விட்டன. நாமும் அதை கைவிட்டு, வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும். அது தான் அனைவருக்கும் நல்லது.
இந்துக் கோயில் சொத்துகளை பலர் குத்தகை பாக்கி வைத்துள்ளனர். அவர்களிடம் பணத்தை வசூலித்து கோயில் சொத்துகளை முறைப்படுத்தி வருவாயைப் பெருக்க அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்து வாரியம் அமைக்க வேண்டும்...
கோயில்களை நிர்வாகம் செய்ய பீடாதிபதிகள், ஆதீனங்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய வாரியத்தை அரசு அமைக்க வேண்டும். கோயில் நிர்வாகத்தை வாரியத்தின் கையில் ஒப்படைத்து, தணிக்கையை மட்டும் அரசு மேற்கொள்ள வேண்டும்.
காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் மூலவருக்கு பதிலாக உற்சவருக்கு அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. இது கூடாது. மூலவருக்குத்தான் அர்ச்சனை செய்ய வேண்டும்.
காவிரிக்கு தீர்வு காண உதவும்...
ஸ்டாலினை தமிழக துணை முதல்வராக நியமித்தது வரவேற்கத்தக்கது. பெங்களூரில் திருவள்ளுவர் சிலையும், சென்னையில் சர்வக்ஞர் சிலையும் திறக்கப்பட்டது இரு மாநில மக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும். காவிரிப் பிரச்னை தீரவும் வகை செய்யும்.
தற்போது மழைவளம் குறைந்துவிட்டது. அதிக மழை பெய்வதற்காக திருநாவுக்கரசர் இயற்றிய மழைப் பதிகத்தை கூட்டு வழிபாடு முறையில் பாட வேண்டும் என்றார் மதுரை ஆதீனம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications