பாளை சிறையில் எஸ்.ஏ ராஜா அடைப்பு
நெல்லை: ஆலடி அருணா கொலை வழக்கி்ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட எஸ்ஏ ராஜா பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் எஸ்ஏ ராஜா, வேல்துரை, ஆறுமுகம் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மதுரை உயர் நீதிமன்ற கிளை கடந்த 5ம் தேதி தீர்ப்பு கூறியது.
இவ்வழக்கில் நெல்லை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பாலா, அழகர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 8ம் தேதி எஸ்ஏ ராஜா இலங்கை செல்ல முயன்றபோது திருச்சி விமான நிலையத்தில் போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் திருச்சி அடுத்த மணிகண்டத்தில் உள்ள அவருக்கு சொந்தமான பல் மருத்துவ கல்லூரி அழைத்து சென்று தங்க வைத்தனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையிலிருந்து ஆலடி அருணா தீர்ப்புரை அளிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் எஸ்ஏ ராஜா, வேல்துரை, ஆறுமுகம், ஆகியோரை கைது செய்ய மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி விஜயராகவன் பிடிவாரண்ட் பிறபித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து எஸ்ஏ ராஜாவை கைது செய்ய ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் பாண்டி, தாழையூத்து இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் திருச்சி சென்றனர். திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்து சிறையிலுள்ள அவரை நேற்று காலை திருச்சி சிறையிலிருந்து அழைத்து வந்தனர்.
பின்னர் அவர் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
-
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு?












Click it and Unblock the Notifications