ஸ்ரீவைகுண்டம் முழுவதும் வீடு, வீடாக தண்ணீர் வழங்குவோம் - பிரேமலதா
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் தொகுதி முழுவதும் வீடு, வீடாக சென்று 10 லாரிகள் மூலம் தண்ணீர் வழங்குவோம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா கூறினார்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட பேரூரணி, அல்லிகுளம், மேலக்கூட்டன்காடு, திம்மராஜபுரம், தளவாய்புரம் ஆகிய பகுதிகளில் தேமுதிக வேட்பாளர் சவுந்திரபாண்டியனை ஆதரித்து பிரேமலதா நேற்று பிரச்சாரம் செய்தார். தெற்கு சிலுக்கன்பட்டியில் பிரச்சாரத்தை துவங்கிய பிரேமலதா பேசியதாவது,
இங்கு பல இடங்களில் குடிநீர் வசதி கூட இல்லை. இலவச திட்டங்கள் என கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். விலைவாசி உயர்வை பொதுமக்கள் சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர். 200, 300 ரூபாய்க்காக உங்களது உரி்மைகளை இழக்காதீர்கள்.
ரோடு வசதி, முறையான பஸ் வசதி இல்லை. எனவே நீங்கள் சிந்தித்து வாக்களியுங்கள். தேமுதிகவை ஆதரித்தால் உடனடியாக குடிநீர் வசதி செய்தி தரப்படும். 10 லாரிகள் மூலம் தொகுதி முழுவதும் வீடு, வீடாக சென்று தண்ணீர் வழங்குவோம்.
மாணவ, மாணவிகளுக்கு இலவச கம்யூட்டர் அமைத்து தரப்படும். பெண்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் தையல் பயிற்சி பள்ளிகள் துவக்க நடவடிக்கை எடுக்கப்படும். விருத்தாசலம் தொகுதியில் தண்ணீர் பஞ்சமே இல்லை என்ற நிலையை விஜயகாந்த் உருவாக்கியுள்ளார்.
இப்பகுதி்க்கு உடனடியாக தீர்வு காண 10 லாரிகள் புக் செய்து வைத்துள்ளோம். உங்களுக்கு உழைக்க நாங்கள் தயாராகி விட்டோம். ஓட்டுக்கு பணம் கொடுத்தால் மனம் மாறி விடாதீர்கள் என்றார் அவர்.
பின்னர் தட்டம்பாறை பகுதியில் பிரேமலதா பேசுகையில், இந்த பகுதியில் கல்குவாரிகள் மூடப்பட்டதால் பலர் வேலை இழந்துள்ளனர். வேலையை அபகரிப்பவர்களுக்கு பாடம் புகட்டுங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications