குழந்தையை தத்தெடுத்தால் அப்பாவுக்கு லீவு!
பெங்களூர்: மெட்டர்னிட்டி லீவு என்றால் தெரியும். ஆனால் இப்போது பெட்டர்னிட்டி லீவு (paternity leave) வந்து விட்டது.
பிரசவிக்கும் பெண்களின் கணவர்கள் அல்லது குழந்தைளைத் தத்தெடுக்கும் பெற்றோருக்கு சமமாக, அதாவது பாலின வேறுபாடின்றி மகப்பேறு விடுமுறையை மத்திய அரசு அளித்து வருகிறது. மாநில அரசுகள் இதை இன்னும் அமல்படுத்தவில்லை.
ஆண்களுக்கு வழங்கப்பட்டு வந்த இந்த விடுமுறை இதுவரை 135 நாட்களாக இருந்து வந்தது. சமீபத்தில் இதை அரசு 180 நாட்களாக அதிகரித்தது. அதாவது பிள்ளை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு இணையாக அவர்களது கணவர்களுக்கும் இனிமேல் 3 மாத சம்பளத்துடன் கூடிய விடுமுறை கிடைக்கும்.
இந்த நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்த ஆண் மகப்பேறு விடுப்பு வசதியை தங்களது ஆண் ஊழியர்களுக்கு அமல்படுத்த முனைந்துள்ளன.
மேலும், பயாலஜிகல் குழந்தைகள் பிறப்பின்போது கொடுக்கப்படுவதைப் போலவே சம்பளத்துடன் கூடிய விடுமுறையை, தத்துக்குழந்தைகளை வளர்ப்பதற்கும் அவர்கள் தரவுள்ளனர்.
தனியார் நிறுவனங்களில் இதுவரை பெண்களுக்கு மட்டுமே இந்த பேறு கால விடுமுறை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஆண்களுக்கும் இந்த விடுப்பு வசதியை விரிவாக்கியுள்ளனர்.
பிரசவித்த மனைவியையும், குழந்தையையும் பார்த்துக் கொள்ள வேண்டுமானால் ஆண் ஊழியர்கள் வழக்கமான விடுப்பு போட வேண்டும் அல்லது சம்பளம் இல்லாத விடுப்புக்குப் போக வேண்டும்.
டிசிஎஸ் நிறுவனம் தனது ஆண் ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரசவிக்கும் பெண்களுக்கும் அல்லது மனைவி பிரசவித்தால் ஆண்களுக்கும், 3 மாத சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இது குழந்தைகளைத் தத்தெடுத்தாலும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிசிஎஸ் நிறுவன துணைத் தலைவர் ரீத்து ஆனந்த் கூறுகையில், பெண்களுக்கு வழங்கப்படும் 3 மாத மகப்பேறு விடுமுறையை தற்போது பாலின வேறுபாடின்றி ஆண்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளோம்.
பெண்களைப் போலவே ஆண்களுக்கும் இந்த விடுமுறை அவசியம் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம் என்றார்.
விப்ரோ நிறுவனம், தனது ஆண் ஊழியர்களுக்கு ஒரு மாத பேறு கால விடுமுறையை அளிக்கிறது. அதேபோல பிற ஐடி நிறுவனங்களும் கூட இதே நடைமுறையை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளனவாம்.
உண்மையிலேயே சந்தோஷமான செய்திதான்..
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications