திருப்பதி நகை திருட்டு-சிபிஐ விசாரணை கோரும் சிரஞ்சீவி
ஹைதராபாத்: திருப்பதி கோவில் நகைகள் திருடு போன விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பிரஜா ராஜியம் கட்சி தலைவர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் தினமும் லட்சக்கணக்கில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் கட்டுபாட்டில் வரும் கோதண்டராமசுவாமி கோவில் நகைகளை சரி பார்க்கும் பணி சமீபத்தில் நடந்தது.
அதில் ரூ. 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் கோவில் அர்ச்சகர் வெங்கடரமண தீட்சிதர் என்பவரை கைது செய்தனர்.
இதை தொடர்ந்து மேலும் பல லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடு போயிருப்பதாக பல்வேறு தரப்பிலிருந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்நிலையில் இது குறித்து பிரஜா ராஜியம் கட்சி தலைவர் சிரஞ்சீவி கூறுகையில்,
கோவில் நகைகளை அர்ச்சகரே திருடியிருப்பது மிகவும் வருத்தமானது. இந்த நகை திருட்டு குறித்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அப்போது தான் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க முடியும்.
இந்த திருட்டு சம்பவத்தை அடுத்து தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோடி கணக்கான மதிப்பு கொண்ட மற்ற நகைகள் அனைத்தும் பத்திரமாக இருக்கிறதா என்பதை தேவஸ்தானம் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications