மாந்த்ரீக சக்தி பெறுவதற்காக 6 குழந்தைகளைக் கொன்ற பெண் மந்திரவாதி, கணவர் கைது

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் பகுதியில், மாந்த்ரீக சக்தி பெறுவதற்காக 6 குழந்தைகளை நரபலி கொடுத்த பெண் மந்திரவாதியும், அவரது கணவரும் கைது செய்யப்பட்டனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சி 15-வது வார்டு பழைய உடையம்பட்டி.

இப்பகுதியில், கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரி 20-ந் தேதி கூட்டுறவு வங்கி ஊழியர் முருகேசன் மகன் ஜெயக்குமார் (3) வாயில் நுரை தள்ளியபடி மர்மமான முறையில் இறந்தான். அடுத்த சில மணி நேரத்தில் வெங்கடேசன் மகன் கோகுல்ராஜ் (4) வாயில் நுரை தள்ளி இறந்தான். அதே ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ந் தேதி தனியார் பஸ் கண்டக்டர் முனியப்பன் மகன் சுரேஷ்குமார் (3), சின்னசாமி மகன் வினோத்குமார் (7), வேல்முருகன் மகன் தினேஷ் (6) என்ற 3 ஆண் குழந்தைகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 27-ந் தேதி சுப்பிரமணி என்பவரது மகள் பிரியதர்ஷினி (மூன்றரை) வாயில் நுரை தள்ளியபடி திடீரென்று இறந்தாள்.

வினோத்குமார், பிரிய தர்ஷினி ஆகியோரது உடல்களைப் பிரேதப் பரிசோதனை செய்து பார்த்ததில், அவர்கள் இருவரும் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ஆத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில், உடையம்பட்டியைச் சேர்ந்த குறி சொல்லும் பெண் பெருமாயி (35), அவரது கணவர் பழனிமுத்து (45) ஆகிய 2 பேரும் அப்பமா சமுத்திரம் கிராம நிர்வாக அதிகாரி முத்துசாமியை சந்தித்து, நாங்கள் 2 பேரும் சேர்ந்து குழந்தைகளுக்கு குருணை மருந்து கொடுத்து கொன்றதாகவும், போலீசார் தங்களை கைது செய்து விடுவார்கள் என்பதால் சரண் அடைவதாகவும் கூறினார்கள்.

அவர்களை கிராம நிர்வாக அதிகாரி போலீஸாரிடம் ஒப்படைத்தார். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

பெருமாயி போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில்,

எனக்கு அடிக்கடி சாமி வரும். குறி சொல்லும் பழக்கமும் உண்டு. நான் சொல்கிற குறியை மக்கள் உண்மை என்று நம்ப வேண்டும் என்று நினைத்தேன். அதேபோல் என்னை மக்கள் சாமி என்று நினைத்து போற்ற வேண்டும், வணங்க வேண்டும் என்றும் நினைத்தேன்.

இதற்காக மாந்திரீக சக்தி கிடைக்க தலைச்சன் குழந்தைகளை கொல்ல முடிவு செய்தேன் குழந்தைகளுக்கு சாமி பிரசாதம் என்று கூறி குருணை மருந்து கலந்த சாப்பாட்டை கொடுத்து விட்டு நான் குறி சொல்வேன்.

குருணை மருந்து சாப்பாடு சாப்பிட்ட குழந்தையின் பெற்றோரை அழைத்து குறி சொல்வேன். உங்கள் வீட்டில் அரை மணி நேரத்தில் ஒரு சாவு நிகழும். அதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறுவேன். அதேபோல அரை மணி நேரத்தில் குருணை மருந்து கலந்த சாப்பாடு சாப்பிட்ட குழந்தை இறந்துவிடும். ஆனாலும் நான் சொல்லும் குறியை மக்கள் நம்பவில்லை.

இதனால் நான் சமைத்த சாப்பாட்டிலேயே குருணை மருந்து கலந்து நாடகமாடினேன். ஆனால் போலீசார் விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடித்துவிட்டனர். போலீசார் என்னை கைது செய்து விடுவார்கள் என்பதால் கிராம நிர்வாக அதிகாரி முன்னிலையில் சரண் அடைந்தேன் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து போலீஸார் பெருமாயி வீட்டில் சோதனை நடத்தினர். அங்கிருந்து, 250 கிராம் குருணை மருந்தை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து பெருமாயி, கணவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மர்மமான முறையில் அடுத்தடுத்து குழந்தைகள் இறந்ததால் உடையம்பட்டி கிராமத்தில் மக்கள் பீதி அடைந்திருந்தனர். சிறப்புப் பூஜைகள் செய்தனர். பலர் வீட்டை காலி செய்து விட்டு வெளியேறினர்.

இதைத் தொடர்ந்து அங்கு மருத்துவக் குழு வந்து மக்களை அமைதிப்படுத்தியது. மேலும், 2 குழந்தைகளின் பிணத்தை பரிசோதனை செய்த பிறகு தான் அந்த குழந்தைகள் குருணை மருந்து கொடுத்து கொல்லப்பட்டது தெரியவந்தது.

இந்தநிலையில் பெருமாயி தம்பதி போலீஸாரிடம் சிக்கியதன் மூலம் உடையம்பட்டி மக்களின் பீதி விலகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+