காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் மோதல் - தமிழக வீரர் வீரமரணம்
சென்னை: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகரில் கடந்த 31 ம் தேதி தீவிரவாதிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடந்தது.
இந்தச் சண்டையில், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த வீரர் ராஜசேகர் (27) கொல்லப்பட்டார். இவர் 28வது பட்டாலியனைச் சேர்ந்தவர்.
நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த ராஜசேகர், திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் அருகில் உள்ள புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்.
இவர் கடந்த 2004ம் ஆண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கான்ஸ்டபிளாக சேர்ந்தார். இவருக்கு அமுதா என்ற மனைவியும், திவ்யா என்ற நான்கு வயது பெண் குழந்தையும் உள்ளனர்.
தமிழகத்தின் கிராமப்பகுதியில் இருந்து வந்த துடிப்புமிக்க இளைஞரான ராஜசேகரின் அரிய தியாகத்தை, ராணுவ உயர் அதிகாரிகள் நெகிழ்ச்சியுடன் பாராட்டினர்.
ராஜசேகரின் இறுதிச் சடங்கு உரிய ராணுவ மரியாதையுடன் அவரது சொந்த கிராமத்தில் இன்று நடக்கவுள்ளது.












Click it and Unblock the Notifications