தண்ணீர் லாரி மோதி மாணவர் உள்பட 2 பேர் பரிதாப சாவு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் நேற்று காலை பேப்பர் போட சென்ற கல்லூரி மாணவர் உள்பட இருவர் தண்ணீர் லாரி மோதி பலியானார்கள்.
தூத்துக்குடி பெரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகன் மகேஷ். பிஏ பட்டதாரி. அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் ஆனந்த். இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.
ஏழ்மை நிலையில் உள்ள இவர்கள் படிப்பு செலவிற்காக பகுதி நேர வேலையாக தினமும் அதிகாலையில் வீடுகளுக்கு பேப்பர் போடும் தொழில் செய்து வந்தனர்.
வழக்கம்போல் நேற்று அதிகாலை 4 மணி அளவில் பேப்பர் போடுவதற்காக இருவரும் தனித்தனி சைக்கிளில் புறப்பட்டனர்.
கோரம்பள்ளம் ஐடிஐ பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் தண்ணீர் ஏற்றி வந்த டேங்கர் லாரி இவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மகேஷ், ஆனந்த் இருவரும் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் இன்ஸ்பெக்டர் முருகேசன் விசாரணை நடத்தி லாரி டிரைவர் பீமன் என்பவரை கைது செய்தார். மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications