நெல்லை-சாலையில் சிதறிய மதுபாட்டில்கள்
நெல்லை: நெல்லையில் மதுபாட்டில்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததில் சுமார் ரூ. 12 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் உடைந்து நாசமாயின.
கோயம்புத்தூரில் இருந்து நேற்று இரவு கன்னியாகுமரி மாவட்ட அரசு மதுபான கிடங்கிற்கு ரூ.12 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று கிளம்பியது.
அதை டிரைவர் அன்சாரி என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் கிளீனர் ராஜூ என்பவரும் வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை நெல்லை பொறியியல் கல்லூரிக்கு எதிரே லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பக்கமாக அசுர வேகத்தில் லாரி ஒன்று மதுபாட்டில் லாரி மீது மோதுவது போல் வந்துள்ளது.
இதையடுத்து டிரைவர் அன்சாரி லாரியை இடதுபக்கமாக திருப்பினார். அப்போது லாரி எதிர்பாராத விதமாக ஒரு பக்கமாக சரிந்து விழுந்தது. இதையடு்தது லாரியில் இருந்து மதுபாட்டில்கள் நடுரோட்டில் விழுந்து சிதறியது.
காலை நேரத்தில் இந்த விபத்த நடந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து லேசாக பாதிக்கப்பட்டது. அந்த பக்கமாக சென்றவர்கள் மது வாடை தாங்க முடியாமல் மூக்கை பிடித்து கொண்டு சென்றனர்.
இந்த விபத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பாட்டில்கள் முற்றிலும் சேதமாகின. மற்ற பாட்டில்கள் லேசான சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications