போடி பெண்ணுக்கு பன்றி காய்ச்சல்
Subscribe to Oneindia Tamil
தேனி: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகம் அறியப்படாத பன்றி காய்ச்சல் நோய் போடிநாயக்கனுரை சேர்ந்த பெண் ஒருவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் முதல் பன்றி காய்ச்சல் நோயாளியான அந்த பெண்ணின் பெயர் சாந்திதேவி (40). இவர் போடிநாயக்கனூர், அம்மாகுளம், புரபெசர் காலனியில் வசிக்கும் மோகன் என்பவரின் மனைவி.
மோகன் அப்பகுதியில் உள்ள தனியார் டீ தூள் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக இருக்கிறார்.
இந்நிலையில் சாந்திதேவி சமீபத்தில் கோயம்புத்தூரில் பொறியியல் கல்லூரியில் படிக்கும் தனது மகன் பாபு என்பவரை பார்க்க சென்றுள்ளார்.
பின்னர் அங்கிருந்து திரும்பிய நிலையில் அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications