கோவை மில்லிருந்து 22 பீகார் தொழிலாளர்கள் விடுவிப்பு-8 பேர் கைது
கோவை: கோயம்புத்தூர் தனியார் மில்லில் அடைக்கப்பட்டிருந்த 22 பீகார் தொழிலாளர்கள் போலீஸார் விடுவித்தனர். மேலும், இவர்களை அடைத்து வைத்திருந்த மில் நிர்வாகத்தின் சார்பில் அமர்த்தப்பட்டிருந்த 8 பேரை கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீராம் கோகுல் டெக்ஸ்டைல்ஸ் என்ற நிறுவனத்தில் பீகாரை சேர்ந்த 22 தொழிலாளிகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக அம்மாநில முதல்வர் நிதிஷ் குமாரிடம் அவர்களது உறவினர்கள் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து அவர் அம்மாநில முதன்மை செயலாளர் அமிர் சுபானியிடம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கூறினார். அவர் தமிழக முதன்மை செயலாளரை சந்தித்து பேசினார்.
இதையடுத்து தமிழக போலீஸார் அந்த மில்லில் அதிரடி சோதனை நடத்தினர். அவர்கள் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த 22 பிகார் தொழிலாளர்களை விடுவித்தனர். மேலும், அடைத்து வைக்கப்பட்டிருந்த தொழிலாளர்கள் தப்பி விடாமல் பார்த்துக் கொண்டிருந்த மில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த 8 குண்டர்களையும் கைது செய்தனர்.
மீட்கப்பட்ட 22 பேரும் ரயில் மூலமாக பாட்னாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து அவர்களை தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications