5 வயது சிறுவன் சித்திரவதை: மக்கள் கல்வீச்சு-தந்தையிடம் விசாரணை
சென்னை: வீட்டில் அடைத்து வைதது சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட சிறுவனை போலீசார் மீட்டனர். அவனது தந்தையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட் புரம் பகுதியில் ஒரு வீட்டில் ஐந்து வயது சிறுவனை கடந்த 6 மாதமாக அடைத்து வைத்து சூடுபோட்டு சித்திரவதை செய்து வருவதாக அப் பகுதியில் வசிப்பவர்கள் புகார் கூறினர்.
மேலும் சிறுவனை மீட்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். வீட்டில் இருந்தவர்கள் கதவைத் திறக்காததல் அந்த வீட்டின் மீது கல் வீச்சிலும் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்தத போலீசார் அங்கு விரைந்தனர். வீட்டில் இருந்த வெங்கடேஷ் (5) என்ற அந்த சிறுவனை போலீசார் மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
அவனது உடல் முழுவதும் வெட்டு, தீக் காயங்களாக உள்ளன. ஏதும் பேச முடியாத நிலையில் அந்தச் சிறுவன் உள்ளதால் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சிறுவனின் தந்தையிடம் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். குழந்தையின் தாய் பிரிந்து வாழ்கிறார். வெங்கடேசும் அவனது தம்பியும் தந்தையிடம் வளர்ந்து வருகின்றனர்.
சிறுவனின் நிலை குறித்து அவனது தாய்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications