எகிப்தில் 2 ரயில்கள் மோதல் - 50க்கும் மேற்பட்டோர் பலி
Subscribe to Oneindia Tamil
கெய்ரோ: எகிப்தில் நின்று கொண்டிருந்த ரயில் மீது வேகமாக வந்த பயணிகள் ரயில் மோதியதில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
கெய்ரோ இரு ரயில்கள் ஒரே ரயில் பாதையில், முன்பும் பின்புமாக வேகமாக சென்று கொண்டிருந்தன. இந்த ரயில்கள் அசியாத் மற்றும் அஸ்வான் ஆகிய நகர்களை நோக்கிப் போய்க் கொண்டிருந்தன.
கெய்ரோ புறநகர் அருகே ஜிர்ஸா என்ற கிராமத்தில் வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த ரயில் தண்டவாளத்தில் ஒரு பசு மாடு குறுக்கிட்டதால், நின்றுள்ளது.
ஆனால் இந்த ரயில் நின்றுள்ள விவரம் பின்னால் வந்து கொண்டிருந்த ரயிலுக்குத் தெரிவிக்கப்படவில்லை. பத்து நிமிடங்களில் வேகமாக வந்த 2வது ரயில், முன்னாள் நின்று கொண்டிருந்த ரயில் மீது படு வேகமாக மோதியது.
இந்தக் கோர விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications