கடலோர மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யலாம் - வானிலை மையம்

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை, தமிழகம் மற்றும் ஆந்திரா ஆகிய பகுதிகளையொட்டி வங்கக்கடலில் உருவான குறைந்தழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது.
இன்றும் (சனிக்கிழமை) கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்யும். உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஓரிரு முறை சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில், அதிக பட்சமாக ராமநாதபுரத்தில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது.
சாத்தான்குளத்தில் 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. பாம்பன், திருச்செந்தூர் தலா 7 செ.மீ., திருப்பத்தூர், விராலிமலை, சங்கராபுரம் தலா 5 செ.மீ., பட்டுக்கோட்டை, ஸ்ரீவைகுண்டம், கடலாடி தலா 4 செ.மீ. பரங்கிப்பேட்டை, கும்பகோணம், பேராவூரணி, திருத்துறை பூண்டி, வலங்கைமான், கந்தர்வகோட்டை,சீர்காழி, ராமேஸ்வரம், தொண்டி, மணிமுத்தாறு, ராதாபுரம், விளாத்திக்குளம், கரூர், ஊத்தங்கரை,மேட்டூர், மருங்காபுரி தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.
சென்னையில் வெயில் - மேகமூட்டம்...
சென்னை நகரில் கடந்த 2 நாட்களாக பெரிய அளவில் மழை இல்லை. லேசான தூறல் சில இடங்களில் காணப்பட்டது.
நேற்று ஓரளவு வெயில் அடித்தது. இன்றும் லேசான வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது. அவ்வப்போத வானம் மேகமூட்டமாக காணப்படுகிறது. லேசான குளிர்ந்த காற்றும் வீசுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications