தமிழ் அகதிகள் எதிர்காலம் ஐ.நா. கையில்- ஆஸி.
சிட்னி: இலங்கைத் தமிழர்களின் அரசியல் புகலிட கோரிக்கையின் எதிர்காலம் ஐ.நா.வின் அகதிகள் ஆணையத்தின் கையில் உள்ளது என்று ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் கூறியுள்ளார்.
இலங்கையிலிருந்து படகு மூலம் ஆஸ்திரேலியா நோக்கி வந்த 78 தமிழர்களை ஆஸ்திரேலியக் குழுவினர் தடுத்து நிறுத்தி தங்களது ரோந்துக் கப்பல் மூலம் இந்தோனேசியாவுக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் இவர்கள் தங்கள் பொறுப்பு அல்ல என்று இந்தோனேசியா கூறி வந்தது. இதனால் பெரும் இழுபறி ஏற்பட்டது. இதையடுத்து 78 பேருக்கும் கொள்கை அளவில் புகலிடம் தர ஆஸ்திரேலியா ஒப்புக் கொண்டது. 12 வாரங்களுக்குள் 78 பேரையும் குடியேற்றம் செய்யவும் அது முன்வந்தது.
இதைத் தொடர்ந்து அந்தக் கப்பலிலிருந்து 22 தமிழர்கள் நேற்று வெளியேறி வந்தனர். மீதமுள்ள 56 பேரும் கப்பலிலேயே உள்ளனர். 22 பேரையும் தான்சுங் பினாங்கில் உள்ள குடியேற்றப் பிரிவு மையத்திற்கு இந்தோனேசியா அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் 78 பேரின் எதிர்காலம் ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் கையில் உள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெறும் ஆசியா பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரூட் சிங்கப்பூர் வந்துள்ளார்.
அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அனைத்து அரசியல் புகலிடம் கோரும் தமிழர்களின் கோரிக்கையை மிகவும் நிதானமாகவும், பொறுமையாகவும், முறைப்படியும் நாங்கள் அணுகுவோம்.
இருப்பினும் தனி நபர்களின் புகலிடக் கோரிக்கை குறித்து முதலில் கவலைப்பட வேண்டியது ஐ.நா. அகதிகள் ஆணையம்தான். இரண்டாவது அகதிகளை ஏற்பது தொடர்பாக ஐ.நா. பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ள 15 நாடுகளுடையதாகும்.
இந்த முறைப்படி இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தை நாங்கள் அணுகுவோம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications