மதுரை- திமுகவிலிருந்து அட்டாக் பாண்டி திடீர் நீக்கம்

மதுரை திமுக வட்டாரத்தில் பிரபலமானவர் அட்டாக் பாண்டி. மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவர். தினகரன் அலுவலக தாக்குதலை தலைமை தாங்கி நடத்தியவர் அட்டாக் பாண்டி. இந்த வழக்கில் இவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது அறிக்கையில் இவரைக் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு மதுரை வட்டாரத்தில் பிரபலமானவர்.
அட்டாக் பாண்டி மீது ஆள் கடத்தல், அடிதடி என பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. கீரைத்துறை காவல் நிலையத்தில் அட்டாக் பாண்டி மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. கீரைத்துறை காவல் நிலையத்தின் ரவுடிகள் பட்டியலிலும் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது.
1999ம் ஆண்டு ஒரு தாக்குதல் வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர் அட்டாக் பாண்டி.
அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருப்பதால் இவருக்கு மதுரை மாவட்ட வேளாண்மைக் குழுத் தலைவர் பதவி கிடைத்தது.
இந்த நிலையில் ஆள் கடத்தல் வழக்கில் அட்டாக் பாண்டி சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைப்பதாக கட்சி பொதுச் செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மதுரை மாநகர் மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் வி.பி.பாண்டி கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதாக அறிவதால், தி.மு.கழக உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று தெரிவித்துள்ளார்.
அட்டாக் பாண்டி நீக்கம், மதுரை வட்டார திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications