Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக மீனவர்களிடம் இலங்கை பாலியல் கொடுமை?

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர் தங்களைப் பிடித்து நிர்வாணப்படுத்தி பாலியல் கொடுமைக்குட்படுத்தியதாக தமிழக மீனவர்கள் புகார் கூறுகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2 நாட்களுக்கு முன்பு, 597 விசைப் படகுகளில் ராமேஸ்வரத்திலிருந்து மீனவர்கள் மீன் பிடிக்க கடலில் சென்றனர். இவர்களில் பலர் இந்திய கடல் எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு இலங்கைக் கடற்படையினர் வந்தனர். தமிழக மீனவர்களை சுற்றி வளைத்த அவர்கள் மீனவர்களின் மீன்பிடி வலைகளை அறுத்து கடலில் எறிந்தனர். பிரபு என்ற மீனவரைத் தாக்கிய கடற்படையினர், அவர் வைத்திருந்த ரூ. 20,000 மதிப்புள்ள ஜிபிஎஸ் கருவி, ரூ. 6000 மதிப்புள்ள செல்போன், தங்க மோதிரங்கள் 2 ஆகியவற்றைப் பறித்துக் கொண்டனர். மீன்களையும் பறித்துக் கொண்டனர்.

இதேபோல மற்ற மீனவர்களிடம் கொள்ளையடித்து விட்டுச் சென்றனர்.

பாலியல் கொடுமை செய்ததாக புகார்...

இந்த நிலையில், சில மீனவர்களை இரவு முழுக்க படகுகளில் பிடித்து வைத்துக் கொண்டு நிர்வாணப்படுத்தி பாலியல் கொடுமை செய்ததாக மீனவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

கையில் சிக்கியவர்களை ஆடைகளை கழற்ற கூறி, இரவு முழுவதும் பாலியல் கொடுமை செய்தனராம். மீன்பிடிக்க வந்தால் இனிமேல் உங்களை அடிக்க போவதில்லை, இது போல நிர்வாண தண்டனை தான் என்று இலங்கை கடற்படையினர் மிரட்டியதாக அந்த மீனவர்கள் கூறுகின்றனர்.

70 வயதான மீனவர் மாசிலாமணி என்பவர் அழுதபடி கூறுகையில், இலங்கை கடற்படை எங்களிடம் இருந்த பொருட்களை எல்லாம் பறித்து கொண்டது. எனது 190 ரூபாய், செருப்பு, டார்ச் லைட் ஆகியவை பறிபோனது. எங்களிடம் உறவு முறைகளை கேட்டனர். பின் பாலியல் கொடுமை செய்தனர். வயது வித்தியாசம் கூட பார்க்கவில்லை என்றார்.

படகின் டிரைவர் அலெக்சாண்டர் கூறுகையில், இந்திய கடற்பகுதியில் தான் மீன்பிடித்து கொண்டிருந்தோம். ஆனால் ஏதோ அவர்களது நாட்டில் வருவது போல இலங்கை கடற்படை வந்து அட்டகாசம் செய்கின்றனர் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+