திமுகவுக்கு சமக, அதிமுகவுக்கு உஉக ஆதரவு
திருச்செந்தூர் & வந்தவாசி: திருச்செந்தூர், வந்தவாசி (தனி) தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மனு தாக்கல் இன்று தொடங்கியது.
இரு தொகுதிகளுக்கும் டிசம்பர் 19ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான மனு தாக்கல் இன்று காலை துவங்கியது. டிசம்பர் 2ம் தேதி வரை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக தினமும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, சம்பந்தப்பட்ட தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகளிடம் மனு தாக்கல் செய்யலாம்.
அதிமுக சார்பில் திருச்செந்தூரில் அம்மன் நாராயணன், வந்தவாசியில் முனுசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
திமுக சார்பில் திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணனும், வந்தவாசியில் கமலக்கண்ணனும் போட்டியிடுகின்றனர்.
தேமுதிகவும் போட்டிடவுள்ளது. ஆனால், பாமகவும் இடதுசாரிகளும் தங்களது நிலையை இன்னும் அறிவிக்கவில்லை. இக் கட்சிகள் பெரும்பாலும் போட்டியிடாது என்றே கருதப்படுகிறது.
சீட் கேட்ட ராதிகா செல்வி:
திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகா செல்வி, முன்னாள் எம்.பி. ஏ.டி.கே.ஜெயசீலன் உள்பட 10 பேர் விண்ணப்பித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதிமுகவில் இருந்து தாவி வந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த அனிதாவுக்கே சீட் தரப்பட்டது.
வந்தவாசி தொகுதியில் சீட் கேட்டு மறைந்த எம்.எல்.ஏ. ஜெயராமனின் மகன் கமலக்கண்ணன், மனைவி எல்லம்மாள் உள்பட சுமார் 40 பேர் விண்ணப்பித்தனர். இதில் கமலக்கண்ணனுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
அழகிரியின் வியூகத்தால் வெல்வேன்-அனிதா:
திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில்,
தலைவர் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அதற்காக அவருக்கு என் நன்றி. முதல்வரின் மகத்தான சாதனைகளாலும், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் அயராத மக்கள் பணிகளாலும், தென்மண்டல அமைப்பு செயலாளர் மு.க.அழகிரியின் தேர்தல் வியூகத்தாலும் திமுக எவரையும் வெல்லும் என்றார்.
திமுகவுக்கு சரத் ஆதரவு?:
இந் நிலையில் இடைத் தேர்தலில் நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும் என்று தெரிகிறது.
அதிமுகவுக்கு உ.உ.க. ஆதரவு:
அதே போல இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிக்க உள்ளதாக, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி அறிவித்துள்ளது.
107வது முறையாக போட்டியிடும் பத்மராஜன்:
இந் நிலையில் தேர்தல் மன்னன் பத்மராஜன் 107வது முறையாக தேர்தலில் போட்டியிட திருச்செந்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
உள்ளாட்சி, சட்டசபை, நாடாளுமன்றம் என எந்தத் தேர்தல் வந்தாலும் இவர் மனுதாக்கல் செய்வது வழக்கம்.
பெரும்பாலும் இவரது வேட்பு மனு பரிசீலனைக்கு பின் தள்ளுபடி செய்யப்பட்டுவிடும். இதுவரை 106 முறை மனு தாக்கல் செய்து மொத்தம் 89 முறை தேர்தலில் போட்டியிட்ட பத்மராஜன் இதுவரை எந்த தேர்தலிலும் வெற்றி பெற்றதில்லை.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications