பாபர் மசூதி இடிப்பு தினம்-நாளை பிளாட்பார டிக்கெட் விற்பனைக்கு தடை
நெல்லை: பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் கொடுக்க 2 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை இருந்தால் மட்டுமே நெல்லை லாட்ஜுகளில் தங்க அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ம் தேதி அன்று பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் துக்க தினம் கடைப்பிடித்து வருகிறார்கள்.
மேலும், இன்றைய தினத்தில் தீவிரவாதிகள் நாச வேலையில் ஈடுபட்டு மத நல்லிணக்கத்தைக் குலைத்து விடக் கூடாது என்பதில் ஆண்டு தோறும் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபடுவது வழக்கம்.
அந்த வகையில் நாளை பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில்...
நெல்லை சரக டிஐஜி கண்ணப்பன், நெல்லை மாநகர் போலீஸ் கமிஷனர் குணசீலன் ஆகியோர் உத்தரவுப்படி நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்புடன் தீவிர கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நெல்லை ரயில் நிலையம் உள்பட அனைத்து ரயில் நிலையங்களிலும் இன்றும், நாளையும் பிளாட்பாரம் டிக்கெட் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரயிலில் செல்பவர்கள் மட்டுமே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். பிளாட்பார டிக்கெட் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. டிக்கெட் இல்லாத யாரும் ரயில் நிலையத்திற்குள் செல்ல அனுமதி கிடையாது.
கடலோரப் பகுதிகளில் தீவிர ரோந்து..
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் உள்ள கடற்கரைகளில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடலோர காவல் படை மூலமும், இந்திய கடற்படை ரோந்து கப்பல்கள் மூலமும் கடற்பகுதிகள தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இன்று நடைபெற்ற வாகன சோதனையில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் சுமார் 200க்கும் அதிகமான வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் 100க்கும் அதிகமான வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சந்தேகப்படி நடமாடிய 100க்கும் அதிகமானவர்களை போலீசார் பிடித்து கைரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னையில் 4 அடுக்குப் பாதுகாப்பு...
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழக டி.ஜி.பி. கே.பி. ஜெயின், கூடுதல் டி.ஜி.பி. ராதா கிருஷ்ணன் ஆகியோரின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல் வேலி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இன்று முதல் 3 நாட்களுக்கு எந்த போலீசாரும் விடுமுறை எடுக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. விடுமுறையில் சென்றவர்களும் உடனடியாக பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேர வாகன சோதனையும் நடந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை, அதிரடிப்படையினர், அதிவிரைவு படையினர், கமாண்டோ படையினர் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளனர்.
கோவில்கள், மசூதிகள், வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது. அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம், பேரணி நடத்த தடை விதிக்க பட்டுள்ளது.
சென்னையில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரைசாலை, வட பழனி 100 அடி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா சாலை, கடற்கரை, காமராஜர் சாலை, உள்ளிட்ட பல்வேறு சாலை மற்றும் முக்கிய தெருக்களில் 30-க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளது. 24 மணி நேரமும் அனைத்து வாகனங்களும் நிறுத்தி சோதனையிட்டு வருகின்றனர்.
முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கவனித்து உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்டிரல் ரயில் நிலையம், எழும்பூர் ரெயில் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையத்தில் போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பின்னரே பயணிகள் அனு மதிக்க படுகிறார்கள். பயணிகளின் உடமைகளும் ஸ்கேன் மிஷின் மூலம் ஆய்வு செய்யப்படுகிறது.
எழும்பூர், திருவல்லிக் கேணி, பெரியமேடு, பிராட்வே, வடபழனி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான லாட்ஜுக்கள், ஹோட்டல்களில் போலீசார் நேற்று இரவு முதல் அதிரடி சோதனை நடத்தினர்.
போலி முகவரிகளைக் கொடுத்து தங்கியிருந்தவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.
தியாகராயநகரில் உள்ள வணிக வளாகங்கள், முக்கிய கோவில்கள், மசூதிகள் தேவாலயங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்த பட்டுள்ளனர்.
சென்னை நகரில் மட்டும் 15 ஆயிரம் போலீ சார் இடைவிடாத பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 6 ஆர்ப்பாட்டங்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய கட்சி போராட்டம்:
இந் நிலையில் மத்திய அரசை கண்டித்து இஸ்லாமிய ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக அக் கட்சியின் தலைவர் அக்ரம்கான் விடுத்துள்ள அறிக்கையில், பாபர் மசூதியை முஸ்லீம் மக்களிடம் முறைப்படி மத்திய அரசு மீண்டும் ஒப்படைக்க வேண்டும்.
லிபரான் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் பாபர் மசூதி இடிப்புக்கு காரணமாணவர்கள் மீது மத்திய அரசு உடனடி நடவடிக்கை முன் வரக வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்து சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் 6ம் தேதி காலை 11 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications