போலீஸ் -வக்கீல் மோதல்: 4 போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய தடை
டெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வக்கீல்கள், போலீஸ் மோதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் போலீஸாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே பெரும் மோதல் மூண்டது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தடியடிக்கு காரணமான அப்போதைய கமிஷனர் ராதாகிருஷ்ணன், கூடுதல் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், இணை கமிஷனர் ராமசுப்பிரமணி, பூக்கடை துணை கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா ஆகிய 4 அதிகாரிளையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. அதேபோல விஸ்வநாதன் தவிர்த்து மற்ற 3 அதிகாரிகளும் அப்பீல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகிய நீதிபதிகளைக் கொண்ட பெஞ்ச் நேற்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
முன்னதாக காவல்துறை சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் சோலி சோரப்ஜி, வாகனாவதி, அபிஷேக் சிங்வி ஆகியோர் வாதிடுகையில், வக்கீல்களின் அத்துமீறல் காரணமாகவே போலீசாரால் தடியடி நடத்தப்பட்டது.
இந்த பிரச்சினையில் ஒரு சாராருக்கு எதிரான உத்தரவை நடைமுறை படுத்தக்கூடாது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று கோரினர்.
இந்த நடவடிக்கைக்கு மட்டும் இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம், காவல்துறை அதிகாரிகளுக்கு எதிரான கோர்ட் அவமதிப்பு மனுவுக்கு தடை விதிக்க மறுபப்ு தெரிவித்து விட்டது.
பின்னர் இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசு, தலைமை செயலாளர் மற்றும் வக்கீல்கள் சங்கத்துக்கு நோட்ஸ் அனுப்பவும் பெஞ்ச் உத்தரவிட்டது.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்











Click it and Unblock the Notifications