சாலையில் நின்ற லாரியால் விபத்து- 3 பேர் பலி
மதுரை: சாலையில் நின்ற லாரி மீது பின்னால் வந்த லாரி மோதியதில் மூன்று பேர் பரிதாபமாக பலியானார்கள்.
மதுரை திருநகர் அருகே தோப்பூர் நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கிற்கு நாமக்கல் மோகனூரில் இருந்து ஒரு லாரி வந்தது. அதிகாலை 4 மணி அளவில், இந்த லாரியில் இருந்த டிரைவர் முகவரி விசாரிக்க தோப்பூர் நான்குவழிச் சாலை 'அண்டர்பாஸ்' பாலத்தின் இறக்கத்தில் லாரியை நிறுத்தினார்.
அப்போது பரவையிலிருந்து சிவகாசிக்கு காய்கறி ஏற்றிச் சென்ற லாரி, நின்றிருந்த லாரியின் பின் பகுதியில் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில், லாரியில் இருந்த சிவகாசி வசந்தம் நகர் கோச்சடை (28), ஆமத்தூர் லட்சுமணன்(42), திருத்தங்கல் காளிராஜ்(55) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.
மேலும், கருப்பசாமி,வையாபுரி, சோமுராஜ், டிரைவர் பாலசேகரன் (42) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த அவர்களை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications