29ம் தேதி தமிழக பாஜக தலைவர் தேர்தல்
சென்னை: தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் தேர்வு வருகிற 29ம் தேதி நடைபெறவுள்ளதாக கட்சியின் மாநிலத் தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மூன்றாண்டுக்கு ஒரு முறை முறையாக அமைப்பு தேர்தல்களை நடத்துகின்ற ஒரே தேசிய கட்சி பாரதீய ஜனதா கட்சி தான். இந்த தேர்தல் பருவத்தில் பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்ப்பு இயக்கமானது, கட்சியின் ஸ்தாபகர் சியாம பிரசாத் முகர்ஜி பிறந்த தினமான ஜூலை 6ம் தேதி துவங்கியது.
ஏற்கனவே உறுப்பினராக உள்ளோர் மீண்டும் தங்களை ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். மற்றும் புதிதாக சேர விரும்புவோரையும் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் துவக்கப்பட்ட இப்பணியானது அக்டோபர் 31ம் தேதியுடன் நிறைவுற்றது.
சேர்க்கப்பட்ட உறுப்பினர்களை அடிப்படையாக கொண்டு கட்சியின் அமைப்புத் தேர்தல்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. 2009 முதல் 2012 வரை மூன்று ஆண்டுகளுக்குரிய அமைப்பு பருவத்திற்கான தேர்தல் தற்போது நடந்து வருகிறது.
கட்சியின் அடிப்படை அமைப்பான கிளைக் கமிட்டிகளுக்கான தேர்தல்கள் 10 ந் தேதியுடன் நிறைவுற்றுள்ளது. இதற்கு அடுத்த படியாக ஒன்றிய, நகர கமிட்டிகளுக்கான தேர்தல் தற்போது நடைபெறுகிறது.
இதனைத்தொடர்ந்து மாவட்ட தலைவர் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் டிசம்பர்
25க்குள் நடத்தி முடிக்கப்படும்.
தமிழ்நாடு மாநிலத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மாநில பொதுக்குழு சென்னையில் டிசம்பர் 29, 30 தேதிகளில் நடைபெறும்.
புதிய மாநிலத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் போது, தமிழகத்திலிருந்து 39 தேசிய பொதுக்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவர். இத்தேர்தலை நடத்துவதற்காக தேசிய அளவிலிருந்து ஒரு தேர்தல் பார்வையாளர் வருகை தருவார்.
டிசம்பர் 29 முற்பகல் மாநில நிர்வாகிகள் சந்திப்பும், பிற்பகல் மாநில செயற்குழு கூட்டமும் நடைபெறும். மறுநாள் டிசம்பர் 30ம் தேதியன்று முதல் நாள் கலந்து கொண்ட பிரதிநிதிகளுடன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள்.
அமைப்பு தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாநிலத்தேர்தல் அதிகாரி ராமலிங்கம் கவனித்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications