நெல்லை எஸ்.ஐ படுகொலை-அரசு மீது விஜயகாந்த் காட்டம்

Subscribe to Oneindia Tamil

Vijayakanth
சென்னை: நெல்லையில் எஸ்.ஐ படுகொலை வழக்கிலாவது முறையான விசாரணை நடக்குமா அல்லது பனையூர் இரட்டைக் கொலை வழக்கில் கேள்விகேட்டதற்காக வழக்கு போட்டு என்னை மிரட்டியதைப் போலத்தான் அரசு இப்போதும் நடந்துகொள்ளுமா என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல்லை மாவட்டத்தில் ஆழ்வார்குறிச்சி அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த வெற்றிவேல் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல், அந்த பகுதியில் மணல் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தார். அதனால் ஆத்திரமடைந்த செல்வாக்கு படைத்த கடத்தல்காரர்கள் இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

குடும்பத் தகராறில் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் என்று நினைத்து, கோர்ட்டில் சாட்சி சொல்லி விட்டு அவர்தான் திரும்பி வருகிறார் என்று நினைத்து, வெற்றிவேலை கொலை செய்து விட்டனர் என்று வேறுவிதமாகவும் கூறப்படுகிறது.

மணல் கொள்ளையை தடுத்தாரோ, நீதிமன்றத்தில் சாட்சி சொன்னாரோ தெரியாது. ஆனால் சப்-இன்ஸ்பெக்டரைப் பொருத்த வரை அரசு சார்பில் தனது கடமைகளை ஆற்றியுள்ளார்.

காவல் துறை அதிகாரியையே கொலை செய்யலாம் என்றும், பின்னர் எப்படியும் தப்பித்துக்கொள்ளலாம் என்றும் சமூக விரோதிகள் கொடுங்குற்றங்கள் புரிய தமிழ்நாட்டில் தயாராகி விட்டனர் என்பதையே இது காட்டுகிறது.

குற்றம் புரிபவர்கள் அரசைக்கண்டோ அல்லது காவல்துறை மீதோ அடிப்படை பயம் கூடகொள்வதில்லை. யாரையும் கொலை செய்யலாம், எந்த நேரத்திலும் கொலை செய்யலாம். எந்த இடத்திலும் கொலை செய்யலாம், கொலை செய்துவிட்டு தப்பிக் கொள்ளலாம்.

அமைச்சர்கள் வரும் வழி என்றாலும் கூட பயமில்லை என்கிற அளவுக்கு குற்றம் புரிந்தவர்கள் நிம்மதியோடு உலவுகிறார்கள். இதில் வேதனை கலந்த வேடிக்கை என்னவென்றால் இந்த கொலை சம்பவத்தில் மந்திரிகள் தான் முக்கிய சாட்சிகள் என்பதாகும்.

காக்கிச்சட்டை அணிந்த காவல்துறை அதிகாரியே கொலைக்கு ஆளாகியுள்ள இந்த சம்பவத்திலாவது முறையான விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர இந்த அரசு முன்வருமா?

அல்லது இப்படி கேட்டால் பனையூர் இரட்டைக்கொலை வழக்கில் எனக்கு சம்மன் அனுப்பியதைப் போலதான் நடவடிக்கை இருக்குமா? என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+