ஆஸ்திரேலியாவில் இன்னொரு இந்தியர் தாக்கப்பட்டார்
Subscribe to Oneindia Tamil
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் மீண்டும் ஒரு இந்தியர் தாக்கப்பட்டுள்ளதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் கடற்கரைப் பகுதியில் மர்ம கும்பலால் தாக்கப்பட்டதாக 28 வயது இந்தியர் புகார் கூறியுள்ளார்.
பெயர் சொல்ல மறுத்த அந்த நபர், தான் 11 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் இருப்பதாகவும், இதுவரை இப்படிப்பட்ட அனுபவத்தை சந்தித்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சிட்னி நகரின் கூகி கடற்கரையில் நேற்று இந்த சம்பவம் நடந்ததாகவும், மர்ம கும்பல் ஒன்று தன்னை தாக்கியதை அடுத்து போலீசார் அங்கு வந்ததாகவும் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடுமையான காயங்கள் ஏற்படவில்லை என்றாலும், மார்பு மற்றும் முதுகுப் பகுதியில் தாக்கப்பட்டு உள்ளடி ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், போலீஸ் தரப்பில் இதுதொடர்பான தகவல் வெளியிடப்படவில்லை.












Click it and Unblock the Notifications